நின்.நினைவுகளின்.நிழல்கள்.பகுதி.6

தலையெனும் மலையினில்
பிறந்திடும் நின் நினைவுகளை
சுமந்திடும் நினைவருவியது
என் மனத்தரையினில் கொட்டிட
முத்துமுத்தாய் பட்டுத்தெரித்திடும்
சாரல்களின் கோர்வைகளே
என் கவிதைகள் .....
****************************************************************************
கிறுக்கள்களாகவே தொடங்கி
கிறுக்கள்களாகவே தொடர்ந்து
கிறுக்கள்களாகவே முடிந்தும்
நின் நினைவுகளின் நிறைவுகளால்
கவிதை கற்றவர் மட்டுமன்றி
மற்றவரும் மதித்திடும் பதிப்பாய்
என் கவிதைகள் .........
***************************************************************************
நினைவுகள் ,
நின் நினைவுகள்
நினைவுகளின் நிழல்கள்
நினைவுகளின் நிறைவுகளென
நிதம்நிதம் நினைவுகளையே
நிதர்சனமாய் பூசிக்கும்
நினைவுப்பூசாரியே !
நினைவுகளை நீங்கள்
நினைவுக்கொள்ளும் அளவிற்க்கு
நினைவுகளைபற்றியே பதிப்பதில்லையே ஏன் ?

ரத்தவோட்டம் கொண்டே ஜீவனிங்கு
மற்றவர்க்கு என்றால் ,
முழுக்க முழுக்க என்னவளின்
நினைவோட்டம் கொண்டே எனக்கு .

அவள் நினைவுகளின் காயங்களை
உள்ளுக்குள் உள்பூட்டிட்டுவிட்டு
மாயம் புரியும் ஆதாயங்களை மட்டுமே
பட்டியல் இடுவதாலேயே என்னவோ
பதிப்புகளின் எண்ணிக்கை வறட்சியினில்
என் கவிதைகள் ..
***************************************************************************
பாலோடு பழம் பிசைய
அதனோடு தேன் கசிய
அக்கலவையினில் காந்தத்தினை
குழைத்த , சாறினில் ஊறிய
நின் நினைவுகளினை, தழுவியே
ஒவ்வொரு வரிகளும் பதிவதால்
படிப்போரினில் , இனிமைக்கு சிலரையும்
கந்தக சக்தியின் ஈர்ப்பு விசையினில்
இரும்பு , துரும்பு இதயங்கள் சிலவையும்
சிக்கென ஈர்த்துவிடுகிறது
என் கவிதைகள் ...
**************************************************************************

எழுதியவர் : (20-Dec-12, 10:02 pm)
பார்வை : 120

மேலே