அடப்பாவி!.. நிச்சயதார்த்தம் ஆன பொண்ணுகிட்ட இப்படியா பேசுவ?..

இது என் வாழ்வில் நடந்த ஒரு உண்மையான சம்பவம். சுமார் 2 மாதங்களுக்கு நடந்தது.

நான் சென்னையில் ஒரு Medium Level Software அலுவலகத்தில் வேலை செய்கிறேன். நான் Designing Team Leader -ஆக இருக்கிறேன் என்னுடைய team member ஒருவர் செந்தில்முருகன்.

இவர் அலுவலகத்தில் அனைவரிடமும் நன்றாக, கலகலப்பாக பேசுபவர். தினமும் காலையில் office வந்ததும் அனைத்து cabine -களுக்கும் சென்று எங்கு, எப்படி, என்ன?.. என அனைவரது செய்திகளையும் கேட்டு அதை என் அருகில் அமர்ந்து வேலை செய்யும் போது ஒவ்வொன்றாக சொல்வர். இதான் தினமும் நடக்கும்.

அன்று ஒரு நாள், சென்னையின் முழு மின்சார நிறுத்தம் (மாலை 5 மணி வரை ) . இருந்தாலும் எங்கள் office -ல் UPS மூலமாக அவசர வேலை உள்ளவர்கள் மட்டும் ஒரே cabine -ல் வேலை செய்தார்கள். அந்த cabine -ல் developer , testing and other teams கலந்து இருந்தார்கள்.

அந்த cabine -ல் இருந்து சுமார் 6 மணியளவில் ராஜன்கான் உங்களுடைய help தேவைபடுகிறது என்று developer என்னை அழைக்க நானும் சென்றேன்.

கொஞ்ச நேரம் project doubt பற்றி பேசி கொண்டு இருந்தோம்.. அப்போது இராஜன் என்று ஒரு குரல் என் பின்னால் கேட்க திரும்பினேன். testting team -ல் இருந்து ஒரு பெண் sweet box -சை நீட்டியபடி எடுத்துக்குங்க என்றார்கள்.

நானும் ஒரு sweet -டை எடுத்து கொண்டு என்னங்க விஷேசம் என்றேன். அதற்கு அவங்க எனக்கு engagement ஆகி இருக்கு என்றார்கள். உடனே நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த விஷயம் செந்தில்முருகனுக்கு தெரியுமா?.. என கேட்டுவிட்டேன்.

ஐயோ நான் கேட்கும் போதே அவங்க முகம் மாறிய விதம் இருக்கே இப்போது நினைக்கையிலும் எனக்கு ஒரு பயம் வருகிறது. நான் செந்தில்முருகனுக்கு இந்த விஷயம் தெரியுமா என கேட்க காரணம் அவருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் முன்னரே எனக்கு சொல்லி இருப்பார். so அந்த அர்த்தத்தில் நான் கேட்டுவிட்டேன். ஆனால் அவங்க தப்பா நெனச்சிட்டாங்க..

அவங்கள விடுங்க.. அவங்கள சுத்தி இருந்தவங்க ஒரு நிமிஷம் என்னையே முறைத்து பார்த்தாங்க!..
அந்த பார்வைகளுக்கு அர்த்தம் எனக்கு very late -ஆகவே புரிந்தது. அந்த பெண் அந்த இடத்தை விட்டு போன பின்பு சக ஊழியர் ஒருவர் சொன்னார், நல்லவேளை அந்த பொண்ணு அவங்க வருங்கால கணவரோட வந்து உனக்கு marriage invitation தரல... இல்லனா நீ அப்பவும் இதே கேள்விய கேட்டு இருப்ப?. என்றார்.

அன்றிரவு முழுவதும் இதையே நினைத்து நினைத்து சிரித்தேன். என் அம்மாவிடம் இந்த நிகழ்ச்சியை சொன்னேன். அதற்கு " அடப்பாவி!.. நிச்சயதார்த்தம் ஆன பொண்ணுகிட்ட இப்படியா பேசுவ?.. " என்றாகள். இனி எங்க எப்படி பேசணும்-னு தெரிஞ்சி பேசுடா என்றார்கள்..

குறிப்பு: நான் அப்படி கேட்ட பிறகு அந்த புள்ளைய பார்க்கும் போதெல்லாம் எனக்குள் பயம் கலந்த சிரிப்பு வந்துவிடும். இந்த கதையை இன்று இங்கு சொல்ல இன்னொரு காரணம் அவங்க போன month கல்யாணம் ஆகி இன்னைக்குத்தான் office வந்தாங்க..

எழுதியவர் : Rajankhan (21-Dec-12, 11:07 am)
பார்வை : 917

மேலே