பொன்னில் வார்த்த நிஜங்கள்

வளர்ச்சியின் அம்சங்களா ?
வளமையின் அறிகுறிகள் தானா ?

மக்கள் மனக் குமுறல்கள்
அவ நம்பிக்கைகள்
சுவர்களில்
கண்ணைக் கவரும் விளம்பரங்கள்
புகழ் சீமான்களின்
அலங்காரத் தோரணைகள் !(தேர்தல்)

உள்ளதைச் சொல்லும்
வாழ்க்கையின் அம்சங்கள்
தெரிந்ததையும்
தெரியாததையும்
விளம்பும்
கண்களின் சொர்க்க வாசல்
நகல் வார்த்த வேடங்கள்!(சினிமா )

சங்கம் மருவிய
மூலத்தின் மூதாதையர்களின்
எண்ண இதழ்களின் காலங்கள்
உயிருள்ள வாசஸ்தலங்கள்
வாழ்க்கைக் கூறுகளாய் ! (இலக்கியம் )

சுதந்திரத்தோடு
தன்னைத்தானே
ஏற்படுத்திக் கொள்ளும்
வேலியில் படரும் பூக்கள் !(தனி மனித உரிமை )

வளர்ச்சியின் அம்சங்கள் தானா ?
வளமையின் அறிகுறிகள் தானா ?
அன்றும் இன்றும் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (31-Dec-12, 3:12 am)
பார்வை : 116

மேலே