காதல் கடந்த வயது !

அவளுக்கு தற்போது தான் காதல் வயது கடந்து
இருந்தது ,கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தாள்.
கருத்துபொதிந்து எழுதுவதாக அவள் நினைப்பு !
தளத்தையும் சொடுக்கி படிப்பாள்,

ஆள் ஆளுக்கு (கருத்துடன்?)கவிதை எழுதி இருந்தார்கள் காதல் கவிதையும் படித்தாள்!சிலாகித்துப் போனாள்!அரியகருதுக்களை பதிந்திருந்தார்கள்! அப்பப்ப! என்ன ஒரு முத்தான உட்கருத்து!,அதற்கு என்ன
வரவேற்பு இளவட்டங்கள்? சிநேகிதர் சங்கலி?

இவள் எழுதிய கவிதையை எவருமே கருத்தில் கொள்ள வில்லை,ஒருவேளை கருத்து கறுத்து கசந்துங் கூட போகுமோ?............எண்ணினாள்!
நாமும் காதல் கவிதை எழுதலாம் என்று எழுதுகோல் எடுத்தாள்!...

கடந்துபோன காதல் நினைவு அனுபவங்களை அசைபோட்டுப்பர்த்தாள்..... நான்கில் மூன்று நினைவுடன் சண்டை போட்டது !

வெறுத்து சமையல் அறைபோன அவளின் கண்களில் பட்டது இன்னும் வாசனை போகாத காலி பெருங்காய டப்பா !...... பலசரக்கு கடைக்கு செல்ல தீர்மானிக்கிறாள்....... இப்போது!!!

(பலசரக்கு/புத்தகம் ...........கடை )

எழுதியவர் : Minkavi (4-Jan-13, 12:34 pm)
பார்வை : 409

மேலே