பெண்மை வெட்கம்
தரையோடு நீ பேச,
வரைவாயோ உன் கால் கொண்டு..
சிந்தும் வெட்கம் உன் நெஞ்சம் பிறழ்ந்து,
நிலத்தோடு ஓடும் ஆறாய் இங்கு..
அவன் நினைவின் ஓலம் ஓயாது நெஞ்சுக்குள்..
நிமிர்ந்து பார்த்தால் தாளாது பெண்மை,
அவன் இருப்பு போதும், பார்வை வேண்டாமே..
பார்த்துவிட்டால் கண்கள் கூசும்,
முகத்தை மறைத்து நாணக் கூடும்..
நாணிக் கோணி குறுகிய போதும்,
பெண்ணின் சிறப்பு அதுவே ஆகும்..
நாணமும் பெண்மையும் காதல் கொண்டால்,
அழகிய ஜோடி அதைவிட இல்லை..!!