சிந்தனை ஓட்டம் -- பகுதி 4
கற்பனை-
இதுதான்
இந்த
படைப்பின் தொடக்கம்!
நேரம் பிறப்பதே
இதன்
அடிப்படையில்தானே !!
இயக்கம் பிறப்பதே
இந்த
நேரத்தில்தானே!
வளர்ச்சி பெறுவது
நேரத்தின்
இயக்கத்தில்தான்!
திருப்தி கொள்வது
இயக்கத்தின்
வளர்ச்சியில்தான்!
ஓட்டம் தொடர்வது
வளர்ச்சியின்
திருப்தியில்தான்!
கற்பனை பிறப்பது
திருப்தியின் விளைவாய்
வந்த மனநிலையின்
ஓட்டத்தில்தான்!
ஓட்டம் இங்கு இளைப்பாறியது ......
ஓடியது..... மங்காத்தாவின் சிந்தனைகள்