பிரபாகரன் சண்முகநாதன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரபாகரன் சண்முகநாதன் |
இடம் | : பல்லடம் |
பிறந்த தேதி | : 16-Jul-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 3 |
தமிழ்வழி கல்வியை தாய்த்தமிழ்ப் பள்ளியில் கற்றவன்.கொஞ்சம் கவிதையும் எழுத அறிந்தவன்.பேச்சாற்றல் உள்ளவன்.
இது தற்கொலை அல்ல !
-ச.பிரபாகரன்
ஏதோ ஒன்று என்னை வருடிச் சென்றது போன்ற உணர்வு.கடந்த இரண்டு
தினங்களாக விளங்க முடியாத உணர்வு.வேறு வகையில் கூறினால் இந்த வீட்டுக்கு
வந்தது முதலே இப்படித்தான்.
நான் இராமநாதன்.பொதுப்பணித்துறையில் உயர் அலுவலராக வேலை பார்த்து
ஓய்ந்ததற்கு ஆன அடையாளத்தை என் தலையில், கொட்டிப் போன முடிகள்
பறைசாற்றும். வருடக்கணக்கில் சேமித்து வைத்த மொத்த பணத்தைக் கொட்டியும்
‘இன்னும் போதவில்லை’ என்றனர், இவ்வீட்டினை விற்க முன்வந்த
புரமோட்டார்ஸ்காரர்கள்.நல்ல காற்றோட்டமாகவும் வசதியாகவும் ஓய்வுக் காலத்தில்
வாழ்வதற்கு ஏற்றதாகவும் இவ்வீடு இருந்ததால் வாங்காமல் வி
ஒரு பறவையின் சிறகிலிருந்து
பறவைக்கே தெரியாமல்
பத்திரமாய் படியிறங்கியது
உதிர்ந்து போன
அந்த ஒற்றை இறகு
உதிர்த்தலின் விதிப்படி
அந்த இறகு
அனாதையாகிவிட்டதென்று
பறவை நினைத்தது
உயிர்த்தலின் விதிப்படி
விடுதலைப் பெற்றதாய்
அந்த இறகு நினைத்தது
சுதந்திரம் என எண்ணி சுகமாக
காற்றில் மிதந்த இறகு
கடைசியாய் சேர்ந்த இடம் மலம்
மலம் என்றால் மனித கழிவு
மனந்தளராத இறகு
கழிவுகளோடும்
கனவுகளோடும் பயணப்பட்டது
கடலுக்கு
கடக்கும் வழியெல்லாம்
கலந்துக்கொண்டே இருந்தது
கழிவுகள்
தூரத்துச் சொந்தமாய் தொழிற்சாலைக் கழிவு
அடுத்தவீட்டுக் காரனாய் அணுக்களின் கழிவு
கடங்காரனாய்
எழுந்ததும் எவ்வாறு
இருக்கிறது தன் முகம்
என்று செல்பி க்ளிக்கி
முகநூலில்
அப்ளாஸ் அள்ளுபவன்...
நடுசாமம் ஆரம்பித்து
அதிகாலை வரை
சாட்டில் கழித்துவிட்டு
களைப்படைந்து
தூங்குபவன்...
பி.பி.ஓவில் பேசி பேசியே
களைப்படைந்து
பிற்பகலில் பல் துலக்குபவன்...
இவர்களுடன் தான்
என் பொழுது புலர்கின்றது.
என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?
தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !
பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !
உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?
யோசித்து சொல்கிறேன் !
தோழன் என்று சொல்லி
தோ
எண்ணங்களை
எழுச்சி பெறச் செய்து
ஏடுகளில் பதியும் வேலை
எளிதானதல்ல (யாரும்…)
எதார்த்தத்தை எறிந்து விட்டு
கற்பனையில் மூழ்கி
கவிதைக் கடலில்
முத்து எடுப்பது
கைவரக்கூடிய கலையல்ல (யாரும்…)
சமூக அவலங்களை
புறக்கணித்து விட்டு
சந்தம் தொடுப்பது
நல்லதல்ல (யாரும்…)
கவிஞர்கள் எண்ணிக்கை
கூடிவிட்ட காரணத்தால்
தயவுசெய்து... (யாரும்…)
இருக்கும் கவிதைகளை
படிக்கவே-இன்றைய
தலைமுறையினருக்கு
நேரமின்மை காரணத்தால்... (யாரும்…)
முகநூலில் பதிவிடப்பட்ட
கவிதைகளை விட
மொக்கை ஜோக்குகளே
மிகுதியான லைக்குகளைப்
பெறுவதால்... (யாரும்…)
கவிதையெழுதிய பக்கங
நண்பர்கள் (4)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

agan
Puthucherry

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (4)
இவரை பின்தொடர்பவர்கள் (4)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

agan
Puthucherry
