மதுமதி H - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மதுமதி H
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Jun-2015
பார்த்தவர்கள்:  266
புள்ளி:  74

என்னைப் பற்றி...

கவிதைகளால் வாழ்க்கையை காதலிப்பவள்...

என் படைப்புகள்
மதுமதி H செய்திகள்
மதுமதி H - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2019 6:48 pm

பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
புத்தகப் பக்கங்கள் திருப்புவது போல
வானம் திருப்புகிறது
வண்ணங்களை...
குங்குமப் பூ ஊறிய பால் நிறமாய்
தங்கத் திடலாய் விரிந்திருந்த வானம்
பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
மாலையின் பொன் சோம்பல் முறிவைத் தொடர்ந்து
வழக்கத்திற்கு முன்பாகவே இருளை இழுத்துக்கொண்டு
நிலவை சந்திக்க ஆயத்தமானது
எப்படி என்றே தெரியவில்லை
ஒளிமொட்டுகளாய்த் தாரகைத் தோரணங்கள்
இரவு பூத்துவிட்டது அதற்குள்
இப்படித்தானோ
பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
திரண்டு வந்து தீண்டிச் சென்று-பின்
தேடிக்கொண்டே இருக்க வைக்கும் காதல். . .

மேலும்

மதுமதி H - மதுமதி H அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2019 11:51 am

துணிகளில்
வெயில் வாசம்
மழை தீண்டிய மண்
புத்தகங்கள்
தண்ணீர் பாய்ச்சிய புல்வெளி
அடுப்பில் பாகு வெல்லம்
ஆலயத்துள் கற்பூரம்...
இப்படி
எத்தனையோ வாசங்களில்
புதைந்துள்ளன
புன்னகை விதைகளும்
மென்மையான நினைவுகளும்
மௌனமான கனவுகளும்...
மணம் சுட்டி பொருள் விளக்கயியலா
வார்த்தைகளில் கூட
அவைப் புதைந்திருக்கும்...
கண்ணீர்த் துளிகளும்
சாய்ந்து கொள்ளத் தோளும்
மீட்டெடுக்க இயலாது
கரைந்த நேற்றுகளை
எனினும்...
நாளைகளில் கானல் வரின்
தண்ணீரும் தேநீருமளித்து
மனநிழலில் இளைப்பாற்றும்...
வாசித்தவுடன்
சில வார்த்தைகளில் தான்
எத்தனை கனம்
பிள்ளைகளைப் போல்
விரல் பிடித்து
மெல்ல அழைத்து வருகையில்
மணம் வீசுகிறது பேரன்புப் பூக்கள்..

மேலும்

ம்ம்ம் வருக வருக 29-Apr-2019 12:09 pm
நன்றி! 29-Apr-2019 12:08 pm
அழகு 29-Apr-2019 12:04 pm
மதுமதி H - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2019 11:51 am

துணிகளில்
வெயில் வாசம்
மழை தீண்டிய மண்
புத்தகங்கள்
தண்ணீர் பாய்ச்சிய புல்வெளி
அடுப்பில் பாகு வெல்லம்
ஆலயத்துள் கற்பூரம்...
இப்படி
எத்தனையோ வாசங்களில்
புதைந்துள்ளன
புன்னகை விதைகளும்
மென்மையான நினைவுகளும்
மௌனமான கனவுகளும்...
மணம் சுட்டி பொருள் விளக்கயியலா
வார்த்தைகளில் கூட
அவைப் புதைந்திருக்கும்...
கண்ணீர்த் துளிகளும்
சாய்ந்து கொள்ளத் தோளும்
மீட்டெடுக்க இயலாது
கரைந்த நேற்றுகளை
எனினும்...
நாளைகளில் கானல் வரின்
தண்ணீரும் தேநீருமளித்து
மனநிழலில் இளைப்பாற்றும்...
வாசித்தவுடன்
சில வார்த்தைகளில் தான்
எத்தனை கனம்
பிள்ளைகளைப் போல்
விரல் பிடித்து
மெல்ல அழைத்து வருகையில்
மணம் வீசுகிறது பேரன்புப் பூக்கள்..

மேலும்

ம்ம்ம் வருக வருக 29-Apr-2019 12:09 pm
நன்றி! 29-Apr-2019 12:08 pm
அழகு 29-Apr-2019 12:04 pm
மதுமதி H - எண்ணம் (public)
25-Sep-2018 4:32 pm

உரையாடல்கள் பலவற்றின்
பாலமாய் அமைந்த 
தொலைபேசிக்குத் தெரியும் 
 நட்பெனும் பொன்னுறவில்
வரமாக அமைந்திடுவோர்
தொலைநோக்கி கொண்டாலும்
தென்படுவதரிதென்று 
விதைகளாய் சந்தித்து
விருட்சமாய் வளர்கையில்
நிழலாய்
மலராய்
கனியாய்ப் புலர்ந்து
அகமதில் ஒளிரும்
பேரன்பில் தான்
எத்தனை இன்பம்
எத்தனை இனிமை 
அரிதான உறவுகளில் மட்டுமே
தொலைபேசியில் பரிமாறிய
மௌனங்களைக் கூட
மொழிபெயர்க்க இயலும்...

மேலும்

மதுமதி H - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2017 10:39 pm

பொன் குழம்பு சொட்டச் சொட்ட செவ்வானமதில், 'வகை வண்ணத்திரிபு வளம்'
வெள்ளிச்சாம்பல் நிறக் கடல், துள்ளித் தளும்புகையில்
அந்தியின் ஆரஞ்சு நிழல் படிந்த ஓர் அலைக்கீற்று
தொடுவானம் அனுப்பிய செய்தியாய்
எதையோ சொல்ல ஓடி வருகிறது
பிரபஞ்ச விந்தைகளை ஆழ சுகிக்கும்
அந்தச் சிறுமியிடம்...

வீசும் காற்று
அனைத்தையும் வருடிக்கொடுப்பது
ஒரவஞ்சனையற்ற ஒரே பரிவில் தான்
ஸ்பரிசிக்க மறப்பது மனிதன் மட்டுமே

நங்கூரம் பாய்ச்சியிருக்கும் மரக்கிளைக்கு தெரிந்திருக்கலாம்
ஏதோ ஒரு கோட்டில்
இணைக்கப்படுகிறோம் நாம் அனைவரும். . .

மேலும்

மதுமதி H - மதுமதி H அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2017 10:21 pm

ஐ ''டிஸ்லைக்'' இட், மை டியர். . .
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

ஆடைக்குறைப்பு
ஆறு இன்ச்சு அரிதாரம்
கணுக்கால், வலியால் கதறும்
ஹை ஹீல்ஸ், ஸ்டிலெட்டோ
தாய்மொழி சுளுக்கு கொண்டதைப்போல்
கடித்துத் துப்பி வெளிப்படும் உரையாடல்

பாழாய்ப்போன 'கூல்-ஹாட்' மந்தையூடான ''யுவதிசம்''. . .

யாவும், ''கரைகின்ற தற்காலிகங்கள்'' என்பதை மறந்து திமிறும்
யவ்வன கர்வம். . .

பிறந்த மண் பெருமைகளை, போற்றவேண்டாம் பரவாயில்லை!
ஆனால், வேறு தேசத்தில் நம் வேர்களை எரிப்பது
பெண்ணியத்தின் பிதற்றலியலன்றி வேறென்ன?

புதுமைப்பெண்
வாவ்!
கல்வி செல்வம் வீரம்
அனைத்தும் அழகாய் அடைந்தாளும் தேவிகள்
கலாச்சா

மேலும்

மிக்க நன்றி. 17-Jul-2017 10:28 pm
வரிகளில் முகம் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் 16-Jul-2017 7:42 pm
மதுமதி H - மதுமதி H அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2017 11:45 pm

பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
புத்தகப் பக்கங்கள் திருப்புவது போல
வானம் திருப்புகிறது
வண்ணங்களை...
குங்குமப் பூ ஊறிய பால் நிறமாய்
தங்கத் திடலாய் விரிந்திருந்த வானம்
பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
மாலையின் பொன் சோம்பல் முறிவைத் தொடர்ந்து
வழக்கத்திற்கு முன்பாகவே இருளை இழுத்துக்கொண்டு
நிலவை சந்திக்க ஆயத்தமானது
எப்படி என்றே தெரியவில்லை
ஒளிமொட்டுகளாய்த் தாரகைத் தோரணங்கள்
இரவு பூத்துவிட்டது அதற்குள்
இப்படித்தானோ
பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
திரண்டு வந்து தீண்டிச் சென்று-பின்
தேடிக்கொண்டே இருக்க வைக்கும் காதல். . .

மேலும்

அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கவிதைப் பயணம், இத்தளத்தில்... மகிழ்ச்சியும், ஆரோக்யமும் அனைவரின் வாழ்விலும் என்றும் மலர்ந்திருக்க, இறைவனை வேண்டி, வாழ்த்துகள்! 12-Jul-2017 11:52 pm
கவியமுதன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
மதுமதி H - மதுமதி H அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2015 11:54 pm

நீர் குடிக்கும் நெருப்பின் தாகம்
தீ அழைக்கும் உறைபனி தேகம்
வான் வளர்த்த திரவதண் யாகம்
மண் சுமக்கும் அத்துனை ரோகம்
யாருணர்ந்து சொல்வது கூடும்
பார் கடக்கும் பயணங்கள் தோறும்
ஏன் எதற்கு என்றறிவோரும்

காலம் நின்று கொடியசைதருணம்
சாரம் யாவும் சாயம் போகும்
பாரம் கொண்ட தானெனும் சிரங்கள்
ஆழிமணலின் துகளாய் சிதறும்
பச்சைவண்ண காற்றும் வீசும்
மிச்சமுற்ற விதைகள் பேசும்
துச்சமில்லை தரணியில் மனிதம்
இதயம் கொண்ட இறையின் கணிதம்

ஏதுமில்லை என்றெனும் போதும்
ஏகமாக வளர்ந்திடும் ஞானம்
தீதும் நன்றும் வினைபலன் சேரும்
யாதுமாகும் ஓர்நிலை காணும்
வாஞ்சையோடு உழுதிட வேண்டும்
வேர்கள் வையம் படர

மேலும்

மிக்க நன்றி! 02-Jul-2015 6:15 pm
//ஏதுமில்லை என்றெனும் போதும் ஏகமாக வளர்ந்திடும் ஞானம் // படைப்பு சிறப்பு. 01-Jul-2015 4:26 pm
மிக்க நன்றி! 27-Jun-2015 3:04 pm
வேர்கள் வையம் படர்ந்திட மீண்டும் The line I liked most 27-Jun-2015 2:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (2)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
gurumoorthy m

gurumoorthy m

ஊரணிபுரம்
மேலே