கதிர்மாயா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கதிர்மாயா
இடம்:  பொட்டல், அம்பாசமுத்திரம்,
பிறந்த தேதி :  09-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Mar-2012
பார்த்தவர்கள்:  1055
புள்ளி:  136

என்னைப் பற்றி...

பெயர்: இரா.ஆ.கண்ணன்
பணி: பத்திரிகை துறைசெல்: 09445997961 ===@====
கதிர்மாயா கண்ணன்
===@====

என் படைப்புகள்
கதிர்மாயா செய்திகள்
கதிர்மாயா - udhyakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2013 9:58 am

அம்மா... நீயே துணை...!

காற்றிலே நீ இருக்கிறாய்
என்னை வருடி விட்டு வாழ்த்துவதாலே!

நீ சுவாசிக்கும் காற்றை கடன் வாங்கி
நான் இன்னொரு ஜென்மம் செய்துடுவேன்!
நீ பேசிடும் வார்த்தைகள் கோர்த்துவைத்து
ஒரு கவிதை புத்தகம் வெளியிடுவேன்!

உன் கை விரல் படுகிற ஓவியமும்
புது உயிர் பெற்று நடைபயிலும்!
நீ தூங்கும் அந்த காணி நிலம்
என் கோவில் கருவறை ஆகிறதே!

விழிகளில் வடிகிற கண்ணீரை-நீ
வியர்வை துழிகளாய் நினைக்க வைத்தாய்!
நான் செல்லும் பாதை வெகுதூரம்
நீ துணையாய் இருந்தால் அது போதும்!!!

மேலும்

நண்பரே தாங்கள் செய்து இருப்பது கவிதை திருட்டு அல்லவா...! இந்த கவிதை என்னுடையது. 2012-ல் எழுத்து தளத்தில்... 2011-ல் முகநூலில் என நான் பதிவிட்ட எனது கற்பனையை திருடி உள்ளீர்களே... இது புகழ் தருமா? 26-May-2016 11:45 am
கதிர்மாயா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2015 2:36 pm

போராட வாருங்கள்
மங்கையர்களே... (பாகம்-2)

கல்லெடுத்துவிட்டீர்கள்
சினிமாக்காரன் மீதெறிய
எறிவதற்கு ஆளிருக்கு
ஏறெடுத்து பாருங்களேன்!

படத்திற்கு படம் பாடமென
பள்ளிப் பருவ காதலாம்
படுபாதகன் பணம் அள்ள
காமப் பார்வை கையாண்டு
நியாயமான காதலென
நித்தமும் சொல்கிறானே
பிஞ்சுகளில் நஞ்சூட்டும்
இக்குணம் கொண்ட
இயக்குனர்களை கண்டித்து
தண்டிக்க வேண்டாமா?

சோகத்திற்கு குடி
சந்தோஷத்திற்கு குடி
வேலைக்கு குடி
வேளாவேளைக்கு குடி
எதற்கெடுத்தாலும்
குடி, குடியென
அரசு பானத்திற்கு
அற்ப விளம்பரமெடுக்கும்
காட்சிகளை கத்தரிக்க
கடும்குரல் கொடுக்கலாமே!

பொது இடத்தில் புகைபிடிக்கும்
காட்சி சொல்லும் இயக

மேலும்

கதிர்மாயா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2015 2:32 pm

பீப் பாடலை
பிதற்றல் சிம்புவை
கண்டித்து குரல்
உயர்த்தி
கோஷம் எழுப்பி
கொடும்பாவி எரித்து
கொட்டும் சாபமிட்டு
கொஞ்சம் நிதானமின்றி
நிதர்சனமும் மறந்து
போராட வாருங்களென
அழைக்கவில்லை
நான் இங்கு..!

அண்ணனின் நிலையில் நின்று
அவலம் போக்க அழைக்கிறேன்
கழிப்பிடம் வசதி இன்றி
அரை நிர்வாணமாய் நிற்கின்றன
அரசு பள்ளிக் கட்டிடங்கள்
இவ்வின்னலை போக்கிடவும்
இறங்கி வந்து போராடுங்களேன்!

தம்பியின் ஸ்தானமேற்று
தவிப்போடு அழைக்கின்றேன்
நாட்டிலுள்ள அக்காள்களை
சீரழிவு சீரியல்களில் இருந்து
மீட்டெடுக்க போராடுங்கள்!

காதலன் இடத்தில் நின்று
கனிவோடு கேட்கட்டுமா?
நெடுங்காலமாய் கேட்கிறாள்
என் காதலி...

மேலும்

பெண்ணியம் பேசும் பெருமைமிகு வரிகள்...! வெல்க இலக்கு ; விடியட்டும் கிழக்கு...! 27-Dec-2015 6:30 pm
அனுதினம் அனுசரிக்கும் பெண்ணின் அவலங்களை போக்க உண்மையாய் அழைப்பு விடுத்தீர்......... அருமை படைப்பில் மட்டுமல்ல ஒரு இலக்கியவாதிக்கே உரித்தான உமது பார்வையுளும்தான்......... எதிழும் தமது பயணம் இனிதே நிறைவேற என் இனிய அன்பின் நல்வாழ்த்துக்கள்..... 27-Dec-2015 2:44 pm
கதிர்மாயா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 11:28 pm

சிந்தனையில் ஏதுமின்றி
சிந்திக்க எதுவுமின்றி
எழுதணும் என்றதனால்
தலைப்பிலே தகராறு...

வார்த்தைகளை தேடித்தேடி
வடித்திட கவிதையொன்று
வந்திடும் என்றெண்ணி
வீதியிலே காத்திருந்தேன்

உன்னத தலைப்பினை
உன்னிடம் நான் கேட்க
உதிர்க்கும் உன் வார்த்தைக்காக
உன் குரல் கேட்டிருந்தேன்

உணவெடுக்க சில நிமிடம்
எடுத்ததில் பசியாற சில நிமிடம்
அன்னம் பட்ட விரல்களை
அலசிஎடுக்க ஒரு நிமிடம்

தண்ணீர் எடுத்து பருகிடவும்
நொடி, நொடியாய் நேரம் செல்ல
நினைவுகளை கோர்க்கவா?
வலிகளை மறைக்கவா?

கவிதையின் தலைப்புக்காக
காத்திருந்த நேரத்தில்
உனக்கு உறக்கம் வந்தது
எனக்கு பொழுது விடிந்தது...!

==========
கதிர்மா

மேலும்

ஆனாலும் எழுதி விட்டீர்களே நன்று 07-Dec-2013 12:34 am
மிக அருமை தோழா......... நல்லா எழுதுறீங்க. !! 07-Dec-2013 12:11 am
கதிர்மாயா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 11:27 pm

பட்டாம்பூச்சி.....

உன்னை தேடி பூக்கள் வராது
ஆனால், நீ வருவாய் என
பூத்துச் சிரிக்கும் மலர்கள்
புன்னகையுடன் காத்திருக்கும்

பேரழகு எதுவென்று அறிய
ஆசையுடன் வாசல் சென்றேன்
பெண்ணினம் அழகென்று
எண்ணிய சில நொடியில்
பூக்களை அவள் ரசித்தாள்

பூக்கள் தான் பேரழகா என
பூக்களை ரசித்திருந்தேன்
பார்த்த நொடி வெட்கத்தில்
தலை கவிழ்ந்த பூக்கள் எல்லாம்
தலை நிமிர்ந்து ரசித்தது உன்னை

நீதான் பேரழகா?
எப்படி நம்புவது?
நீயும் என் மனம் போல்
நிலையான ஓரிடம் இன்றி
அங்கும்... இங்கும் அலைகிறாயே...!

வண்ணங்களால் அழகான
வண்ணத்துப்பூச்சியே
எண்ணங்களால் அழகாவது
எப்படி என்று கூறிச்செல்...!

=========

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
sarabass

sarabass

trichy

இவர் பின்தொடர்பவர்கள் (21)

இவரை பின்தொடர்பவர்கள் (21)

மேலே