சுஜன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுஜன் |
இடம் | : London |
பிறந்த தேதி | : 20-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 209 |
புள்ளி | : 24 |
;)
குழு அரட்டையாம்...
நண்பன் என்னை சேர்த்தான்..
வெல்கம் டு த குருப்..
ஸ்ரீதிவ்யா படம் மட்டும் டீபி யில் ...
எப்போதும் online ...
காலை வணக்கம் தொடங்கி இரவு வணக்கம் வரை
எத்தனையோ கதைகள் ஏதேதோ வகைகள்..
இடையிடையே சிரிக்கும் முகங்கள் வேறு..
அவள் கதையின் பாவனை மட்டும்
எனக்கு பரிட்சையமானது போல இருந்தது..
காலப்போக்கில் ...
நண்பன் மேல் அவளுக்கு காதல் மலர
அவனும் அவள் selfie ஒன்று கேட்க
மாற்றினாள் டீபி - எனக்கு
ஏற்றினாள் பீபி
அன்று விலகியவன் தான்
குழுவிலிருந்து மட்டுமல்ல - என்
நண்பனிடமிருந்தும்..
அவள் என் முன்னாள் காதலி..
அவனுக்கு அது வாட்ஸ்அப் காதல்- அவளுக்கு
அது வெறும் வாட்ஸ் நெக்
மழையை அழைத்தது தவளை-
வேட்டைக்குத் தயாராய் பாம்பு,
உயரே பருந்து...!
நெடு நாட்களின் பின் ஒரு
வெளிநாட்டு அழைப்பு
மாமா.. என்றான் அக்கா மகன்
வெளிநாட்டில் பிறந்தவனிடம் கூட
அழகாக தமிழ் பிறந்து இருக்கிறதே!
என்று எண்ணி முடிப்பதற்குள்
எனக்கும் "தமில்" தெரியும் எப்பூடீ.. என்று தொடர்ந்து முடித்தான்..
அப்போது தான் உணர்ந்தேன் இறந்தே பிறந்தது தமிழ் என்று
பேசிக் கொல்லாதே தமிழை- தமிழா
பேசாமல் மென்று விடு
நெடு நாட்களின் பின் ஒரு
வெளிநாட்டு அழைப்பு
மாமா.. என்றான் அக்கா மகன்
வெளிநாட்டில் பிறந்தவனிடம் கூட
அழகாக தமிழ் பிறந்து இருக்கிறதே!
என்று எண்ணி முடிப்பதற்குள்
எனக்கும் "தமில்" தெரியும் எப்பூடீ.. என்று தொடர்ந்து முடித்தான்..
அப்போது தான் உணர்ந்தேன் இறந்தே பிறந்தது தமிழ் என்று
பேசிக் கொல்லாதே தமிழை- தமிழா
பேசாமல் மென்று விடு
தாய் நாட்டில் வழியிருக்க..
தாய் தகப்பன் அயலிருக்க..
கற்றதமிழ் நாவிருக்க..- என்
மனம் மட்டும் மறுத்தது உடனிருக்க..
பள்ளிக்கூட வாழ்க்கை முற்றுப்பெற
வெளிநாட்டு மோகம் சற்றுத்தொட..
மாறுகின்ற சமூகப்போக்கின் முன்னோடியாக
வெளிநாடு ஒன்றே முன்னிலையானது..
ஒரேயொரு ஆண்பிள்ளை
ஆசைப்பட்டு கேட்டான் என்று - அம்மா
அடகுவைத்து காசெல்லாம்
ஆரார்க்கோ கைமாற்றி..
கண்டவனின் கால் பிடித்து
கெஞ்சி மன்றாடி - வலியது மறந்து
எனக்காய் போராடி - கடைசியில்
மாணவனாய் அனுமதித்தான் வெள்ளைக்காரன்
அவன் தந்த விசாவுக்கு மதிப்பளித்து
வந்தேன் வெளிநாடு- பெற்றொரை தவிக்கவிட்டு..
வந்த சந்தோசம் கவலைகளை மறைத்தது
புதுவ