கவினி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவினி |
இடம் | : ஒட்டன்சத்திரம் |
பிறந்த தேதி | : 17-Sep-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 3 |
கவிதையில் ஆர்வமுள்ள பள்ளி மாணவி
நான் மைத்தீட்டி கொள்வது
என் கண்களை
அழகுப்படுத்துவதர்க்காக அல்ல.....
என் கண்களுக்குள் இருக்கும்
உன்னை பார்த்து எவர்
கண்களும் பட்டுவிடக்கூடாது
என்பதற்காக தான்.........
ஒவ்வொரு உறுப்பும்
ஒவ்வொரு உலகமாய் ...
செவிப்புலன் இழந்தால்
ஒலி உலகம் இல்லை ...
விழிப்புலன் இழந்தால்
ஒளி உலகம் இல்லை ...
மனப்புலன் இழந்தால்
அன்பு உலகம் இல்லை ...
மூளைப்புலன் இழந்தால்
முற்றும் இல்லை ....
அந்திவான வேலை
அலறும் கூகை
காக்கைகள் வீடுசெல்ல
கதிரவன் விட்டுவிலக
பஞ்சாரத்தில் கோழியடைய
பட்சிகள் பழம்தேட
பனிமேகம் பனித்திரையில்
பார் போத்த
ஊமையாய் ஊர்க்குருவிகள்
உறைவிடம் நோக்க
ஆழியாய் பொங்கியது குமரியுள்ளம்
மனத்தலைவன் மனை நோக்காததால் !!!
கண்ணுக்குத் தெரியாத
தைரியத்தின் கலங்கள் கரைப்பானாக
கண்ணுக்குத் தெரிந்த
எனதுலகம் கரை பொருளாயிற்று
கரைசலாய் கலங்கலாய் என்மனம் !!