தமிழ் கலை கடவுள் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ் கலை கடவுள் |
இடம் | : Madras |
பிறந்த தேதி | : 11-Aug-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 28 |
காதல் என்றால்
காமம்தானா?
உயிர்களுக்குள் ஏற்படும்
உன்னதமான
உறவுமொழி !
ஒட்டடைக் கொம்புபோல்
ஒய்யார வடிவழகி ....!
ஒட்பமான நிறத்தழகி !
ஒப்பில்லா இனிப்பழகி !
தோலுரித்து கடிக்கச் சுவையாவாள் !
தோகை சிகையில் கொண்டிருப்பாள் !
தோட்டத்தில் அடர்ந்து வளர்ந்திருப்பாள் !
தோரணமாயும் சிறந்து நிற்பாள் ...!!
கன்னல் இவள்மிகத் தித்திப்பாள் !
கற்கண்டு சீனியாய் பிறப்பெடுப்பாள் !
கணுவாய் வெட்டித் தின்றிடலாம் !
கரும்புச்சாறு ருசித்துப் பருகிடலாம் !
காமன் கையில் வில்லானாள் !
காமாட்சி கரத்தில் ஏந்திநின்றாள் !
பட்டினத்தார் கையிலும் இடம்பிடித்தாள் !
பொங்கலுக்கு புதுவரவாய் வந்திட்டாள் ....!!
இவ்வளவு விரைவில்
பிரிவதற்கு தான்
அவ்வளவு விரைவில்
என் காதலை
ஏற்றாயோ?
உழவர் உழைப்பால் மணி கதிர்கள்
உதித்து வயல்கள் பொங்கட்டும்..!
பார்க்கும் வறுமை பிணிகள் தோற்று
பாடும் செழுமை பொங்கட்டும்..!
வள்ளல் நிறைந்து கொல்லல் குறைந்து
வசந்தம் நாட்டில் பொங்கட்டும்..!
அன்னை தந்தையை அன்புடன் காக்க
அணைக்கும் கைகள் பொங்கட்டும்..!
அரக்கர் இல்லா அன்பு உலகாய்
அமைதி தினமும் பொங்கட்டும்..!
மதத்தால் மனதை மாசுபடாமல்
மனதில் மனிதம் பொங்கட்டும்..!
பகைவர் பழமை பழிகள் மறந்து
பணிவாய் பொறுத்தல் பொங்கட்டும்..!
தமிழன் வாழ புவியில் எங்கும்
தமிழர் திருநாள் பொங்கட்டும்..!
தளத்தின் தமிழ் உறவுகளுக்கு
பொங்கும் வாழ்த்துக்களுடன்..!
இரவில் கூட உன்னை
நான் பார்கிறேன்..
கண்களால் அல்ல..
கனவுகளால்..!
தாயின் கருவறை சொன்னது..
இருள் நிறைந்து இருப்பது
நரகம் மட்டுமல்ல..!
சுவர்கமும்தான்..!
காதல் நட்ப்பை பிரிக்க
முயற்சி செய்யும்..!
ஆனால் நட்பு
அந்த காதல் சேர
தன் உயிரையே தரும்.!