பாலா தமிழன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலா தமிழன் |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 11-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 0 |
இதான் நான் : செய்தது தவறென உணர்ந்தால் காலில் விழவும் தயங்கமாட்டேன்!செய்யாத தவறுக்கு பழி சொன்னால் எந்த உறவையும் இழக்கத் தயங்க மாட்டேன்!!!தீமைக்கும் நன்மை செய்
உன் கண்களுக்கு பிடிக்கும்
பலரிடம் பழகுவதை விட
உன் மனதிற்கு பிடிக்கும்
ஒருவரிடம் பழகி பார்
உண்மை அன்பு புரியும்........!
நிம்மதியில்லா நிமிடங்களுடன்
நிமிர்ந்து பாருங்கள்
நிலையாய் நிற்கும் நிலவு கூட
நிலையின்றி நீரில் மிதப்பதாய் தெரியும்..
காரணம் கலங்கிய உன் கண்களுக்குள் கிடக்கும் கண்ணீர்....
செ.மணி
தென்றல் மோதி திறந்திடும்
பூ இதழ்களில்
தேன்தனை சுவைத்திட
வட்டமிடும் வண்டுபோல்
தினம் என்னை மலர செய்யும்
திமிரானவன்
கருவிழி
பார்வைக்குள் அகப்பட்டு
கனவிலே மிதக்கின்றேன்
காதலை
சொல்லத் தெரியாமல் ..!!!
தேக தழுவலிலே
காமம் கரைந்தோடும்
காதல் வேண்டாமே!
விழியின் பார்வைக்குள்
அழகை அளந்துக்கொள்ளும்
ஆய்வும் வேண்டாமே!
நேரம் தெரியாமல்
ஆசை வார்த்தைகளால்
பேசும் அவலம் வேண்டாமே!
கனவு கோட்டைக்குள்
வேட்டை அரங்கேறும்
வேலையும் வேண்டாமே!
பெற்ற வயிரினை
பற்ற வைத்து நாம்
கரம் சேர வேண்டாமே!
எங்கே நீ வாழ்ந்தாலும்
உன் ஒற்றை நிமிடத்தில்
எனை பற்றி நினைக்கும்
சின்ன நினைவுக்குள் நான்
வாழும் அந்த காதல் போதுமே!
வேறென்ன உன்னிடத்தில்
நான் கேட்பேன்-நீ எனை
பிரிந்து செல்கையிலே
என் காதல் பரிசாக!
மேகக்கூட்டங்கள் மெல்ல மெல்ல மிதந்து
மாலை பொழுதிற்கு அழகு சேர்த்தன
விடைபெறும் சூர்யனும் சிரித்துக்கொண்டே
இரவு ஆட்சிக்கு வழிவிட்டு மறைந்தான்
பறவைகள் கூட்டிற்கு வந்து கூவி கூவி உறங்கின
மனம் மட்டும் ஏனோ அமைதியின்றி தவித்தது
எண்ணங்கள் ஏன் இப்படி அலைகழிக்கின்றன?
விண்மீன்கள் விழித்துக்கொண்டு விளையாடின
நிலவோ கண்டும் காணாதது போல் ஒளிர்ந்தது
ஆசைமுகம் நெஞ்சில் ஆதவன் போல் எழுந்தது
புற அழகெல்லாம் அவள் முகத்திற்குமுன் தொலைந்தது
காதலுக்கு பலியான கட்டிளம் வாலிபன் கற்பனையில்
காதலியை ஆடவிட்டு கண்மூடி ரசிக்கலானான் -
இரவு அவனை போர்வையாய் சுற்றி பாம்பாய் நெருக்கி
இனந்தெரியா அமைதிக்கு இட்டுச
ஊடல்களின்
நிர்வாணங்களை
போர்த்தும்_என்
கெஞ்சுதல்களோடு!
உன் விரல்களை
வருடிக்கொண்டே
முடிவுகளுக்கு
அப்பாலும் தொடரும்
ஓர் கடற்கரை
பயணம் போதும்!!
புனைவுகளின்
முதுகுத்தண்டை
கிழித்துக்கொண்டு
மெய்ப்பியலோடு
வீசும் உன்
புன்னகையின்
பிரகாசத்தில்
கரைந்துவிடும்
ஓர் இராத்திரியில்
நம் தனிமை போதும்!!
சூட்சுமங்களால்
நிறைந்துவழியும்
உன் மோகன
பார்வையின்
இரகசியத்திடம்
மண்டியிடும்_என்
அதரங்களை
பட்டைதீட்ட நம்
பருவ பொழுதொன்று
போதும்!!
உன்னை
சுமந்துகொண்டு
எனக்குள்
தனித்திருக்கும்
காதலின்
சுவாசம் போதும்!
ஆயிரம்
கவிதைகளை
அறுத்தெறிய!
தெருவொன்றில்
அதிவேகத்தில்
இறுக்க அ