ashok vimala - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ashok vimala |
இடம் | : virudhunagar |
பிறந்த தேதி | : 14-May-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-May-2014 |
பார்த்தவர்கள் | : 102 |
புள்ளி | : 27 |
நறுமணம் கமழும் நந்தவனம்
கரங்களில் ஏந்துது மலர்வனம்
விழிகளில் தெரியுது சுகவனம் !
புன்னகை பூக்குது சிறுமலர்
பொன்னகை சூடிய நறுமலர்
குறுநகை தவழ் குறிஞ்சிமலர் !
முத்துக்கள் சிதறும் முகபாவம்
துளியும் இல்லை அகம்பாவம்
இவ்வழகின் முன் ரதிதான் பாவம் !
பார்வையில் தெரியுது அபிநயம்
பார்வைக்கு தெரியுது சிற்பநயம்
படமோ இணையதளத்தின் உபயம் !
மிளிரும் தளிரிவள் தங்கச்சிலை
ஒளிரும் வையத்தில் வைரச்சிலை
குளிரும் நிலவொளியில் பளிங்குசிலை !
கொஞ்சும் அழகோ தஞ்சமிங்கே
சொல்லிட குறையும் பஞ்சமிங்கே
வாழ்த்திடும் அளவிலா நெஞ்சமிங்கே !
அழகாய் பிறந்திட்ட ஓவியமன்றோ
அழகிற்கே அழகு அ
[ பெண் மனம் ஒன்று தனது வாழ்க்கையின் ஓட்டங்களை தானே சொல்வது மாதிரியான வடிவம் தான் இந்த ஜீவன் ]
நெஞ்சில் களிப்போடு,
கையில் இனிப்போடு,
விழிகளில் ஆசையோடு,
காத்திருந்த நெஞ்சம்
கல்லாகிப் போனது,
பெண் பிள்ளையாக
நான் பிறந்ததால் !
காற்றடித்தால்
காணாமற் போகும்
களிமண் குடிசையில்,
கல்வியின் வாசம்
நுழைவதற்குக்
காசுக்கு எங்கே போவது ?
சில வண்ணச் சீருடையிட்டு,
சின்னப் பாதங்களில் உறையிட்டு,
சின்னஞ்சிறிய மலர்கள்
சிங்காரமாய் பள்ளி செல்கையில்
சிந்திய கண்ணீரைத் தொட்டு
சிரித்தபடி செல்லும் என் மனம் !
சில்லெனும் குளிரோடையில்
சித்திரமாய் தாமரை மொட்டு
சிரித்து நின்றால்தான், கதிர
உன் வானில்
நான் நிலவென
நினைத்தேன் ! அது
நிஜமல்ல என்பதைப்
புரிந்து கொண்டேன் !
நிலவாய்
நிலைத்திருக்க விரும்பினேன் !
நீயோ மேகமாய்
என்னை அலைக்கழித்தாய் !
மழையாய் கரைந்து
மண்ணோடு மண்ணாகிறேன் !
மீண்டும் மரமாய்
நிமிர்ந்து உன்னைக் காண !
சிந்தனையைச்
சீரழிக்கும்
சிரிப்புக்குச் சொந்தக்காரி !
வெண்கடலில்
கரு முத்தைக்
காட்டி மிரட்டும்
கெட்டிக்காரி !
கனலாய் வார்த்தை
உமிழ்ந்து, என்
கண்ணீரில் தாகம்
தீர்க்கும் உளவுக்காரி !
என்
ஆன்மாவை
அமைதியாய்
உறிஞ்சிய உரிமைக்காரி !
வாழ்வில்
சூரியனாய் எழுந்தவனை
சருகாக்கி சங்கடப்படுத்திய
சாகசக்காரி !
என் இதயத்தை
இரு கூறாக்கி, நீ
இட்ட நெருப்பு
இனி எரியும்
நாளைமுதல் உனக்குள் !
என் இதயத்தை
எனக்கு அறிமுகப்படுத்தியவளுக்கு,
ஏங்கிக் கிடந்த
என் எண்ணங்களை
எழுத்துச் சிதறல்கள் கொண்டு
ஏணி அமைத்திருக்கிறேன் !
முடிந்தால்
ஏறி வந்து
என்னைப் புரிந்து கொள் !
மழைத்துளிக்குப் பின்
மண் வாசனை ,
மலருக்குப் பின்
மகரந்த வாசனை,
உன் பின்
என் யோசனை
என்றாவது வந்திருக்கிறதா ?
நீ ஏன் வந்தாய் ?
என் பின் !
கரிசல் காடு காத்திருக்கும்
கன மழைக்கு,
கயவன் நான்
காத்திருக்கிறேனா ?
என்றாவது உனக்கு !
நீ ஏன்
காத்திருந்தாய் எனக்கு !
உன் பரிவு
உன் பாசம்
உன் காத்திருப்புகள்
உன் எதிர்பார்ப்புகள்
உன் சமாளிப்புகள்
உன்னுடைய
சின்னச் சின்னப் பொய்கள்,
சி
நீ வெறுத்தாலும் உனை
நான் வெறுப்பதில்லை
நீ தானே எனது காதலி.............!
காதலிக்கும்
ஒவ்வொரு தருணமும்
நான் காதலை
ரசித்தேன் உன்னோடு.............!
எனக்காக பிறந்தவள்
எனை வாழ்விக்க
உரியவள் நீதானடி.............!
வெறுப்பதில்லை
எனது மனதால் சிறுதுளியும்
நினைப்பதில்லை............!
சிலநேரம் ஊடல்கள்தான்
உன்னோடு அது ஒன்றும்
நிலையில்லை என்னோடு..........!
பொறுமையுடன் உனை
அனுகுகிறேன் பொறுத்திருந்து
உனை விரும்புகிறேன்.............!
நீ ஒரு வார்த்தை
சொன்னால்
நமது காதல் நிம்மதியாக
வாழுமடி சொல்வாயா..............!
எனது விருப்பத்தை
உன்னிடம் தெரிவித்து
களை
அட !
நன்றி
கெட்டவனே !
நான்
பெத்த
மகனே !
என்னில்
இருந்து
எடுக்கப்பட்டவனே !
என்னையா !
எடுத்தெறிந்து விட்டுப்
போகிறாய் !
முதியோர் இல்லத்தில் !
பதிலாக,
இடுகாட்டில் சுட்டு
பிடி சாம்பலாக்கியிருக்கலாம் !
இந்தக்
கட்டையாவது
வெந்திருக்கும் !
என்
காலமாவது
முடிந்திருக்கும் !
ஆனால்,
குடும்பத்திலிருந்து
பிள்ளைகள்
பிடுங்கி எறிந்த
பெற்றவர்களின் கூட்டத்தில் ,
உன்
தாயுள்ளம்
ஒரு
களையாக
ஒரு நாளும் வாழாது !
நீ
வீடு போய்
சேருமுன்,
என் உயிர் ...