Jerrin Prasad - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jerrin Prasad |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 21-Aug-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 0 |
கத்தியின்றி ரத்தமின்றி
எனக்குள்ளே
யுத்தம் ஒன்று நடக்குதடி..
நீ இன்றி
கடக்கும் காலங்கள்
காயங்களை தருகுதடி..
சிரித்து திரிந்த
தருணங்கள் எல்லாம்
சோகம்தனை தெளிக்குதடி..
விரல் கோர்த்து
நாம் நடந்த சுவடுகளெல்லாம்
வேதனைகள் தருகுடடி..
கண்ணிரண்டில்
கத்தி வைத்து
கொல்கிறாய் என்னை..
கனவுகளில் வலிக்கிறது
அழுகிறேன் பச்சிளம் குழந்தையாய்
வலிகளை வருணிக்க வார்த்தைகள் ஏதும் இன்றி..
என்னை விட்டு
விலகி சென்றாய்
அதற்கு காரணங்களும் பல தந்தாய்..
ஆனால் உன்
நினைவுகள் மட்டும் என்னுள் நிலைத்து
நிலைகுலைய செய்யுதடி பெண்ணே..
பிறப்பின் அர்த்தம் அறிந்தேன் உன்னால்
ஆன
சிறிது காலம் காத்திரு
கஷ்டமோ, நஷ்டமோ
தன்னோடே வைத்து படிக்க
வைத்த தந்தை. .........
தடுக்கி விழுந்தாலே
துடிதுடித்து போகும்
அன்னை.............
குழந்தை முகம் மாறாத
தங்கை. .............
இடையில் அன்பென்ற ஆயுதம்
கொண்டு தாக்கும்
நீ
புரிகிறது உன் நிலை பெண்ணாக
பிறந்துவிட்டாய்
படிப்பறியா வீட்டில்
படித்தும் முடித்துவிட்டாய்
மாப்பிள்ளைகள் முந்தியடித்து
கொண்டிருக்கின்றனர்........
காதலை சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல் நீ
தவிப்புகள் புரிகிறது
என்னவளே
ஆனால் என் நிலைமையும்
உணர்வாயா............
இன்னும் சிலகாலம் பொறு
வாங்கிய பட்டத்தோடு வீட்டின்
பத்திரத்தையும் அடகுகட
கரைய வேண்டும் உன் கரங்களுக்குள்...
விழிக்க வேண்டும் உன் விழிகளுக்குள்...
தஞ்சம் வேண்டும் உன் நெஞ்சுக்குள்...
சிறிது...
பஞ்சமும் வேண்டும் உனை பிரியும் நொடிகளுக்கு...
வீழ்த்த வேண்டும் உன் கோபங்களை....
விழவும் வேண்டும் உன் புன்னகையில்...
ஒரு நொடியேனும்...
மலர வேண்டும் உன் மனதிற்க்குள்...
மறு நொடியே...
மரித்திடுவேன் உன் மடியினில்...
அந்த ஒரு நாள்
அது ஒரு சனிக்கிழமை இரவு !!! விடியல் பற்றி முன் திட்டம் இல்லாமல் ரசித்து தூங்ககூடிய அற்புத இரவு !!! வெள்ளிக்கிழமை அலுவல் வேளையிலும் அடுத்த நாள் கிளம்பும் மனநிலையை எண்ணி ஏங்க வைக்கும் இரவு, போட்டுவைத்த ஞாயிற்றுக்கிழமை திட்டங்களை மனதில் ஒத்திகை பார்த்து மகிழும் இரவு !!!
இன்னும் இப்படியான பல கனவுகளையும் சந்தோசங்களையும் உள்ளடக்கிய அந்த நாளில் கமலேஷின் சந்தோசம் இரட்டிப்பாகவே இருந்தது இல்லை இருபது மடங்கு இருந்தது எனலாம். ஆம் அன்றைய தினம் , . . . .
காலையில் அவசரமாக விரைந்துகொண்டிருக்கையில் பஸ்ஸை தவறவிட்ட ஒரு பள்ளி மாணவனுக்கு, நேரமானதையும் பொருட்படுத்தாமல் லிப்ட் கொடுத்து அவனுக