மதுராதேவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மதுராதேவி
இடம்:  theni
பிறந்த தேதி :  12-Dec-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Nov-2013
பார்த்தவர்கள்:  357
புள்ளி:  80

என்னைப் பற்றி...

கவிதையை ரசிக்கும் கவிதை நான்...

என் படைப்புகள்
மதுராதேவி செய்திகள்
மதுராதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2015 7:33 pm

கவிதையை மறக்கவில்லை
கவிதையால் மறந்தேன்
கவிதையால் வாழ்தேன் என் வாழ்வை...

இன்று கவிதை எனும் மூன்று எழுத்தை
எழுதவும் பெருமை கொள்கிறேன்
நீண்ட காலத்திற்கு பின்...

இந்த கவிதையை ரசிக்கும் கவிதையை
கொஞ்சம் கவி கொடு உன் பார்வையால்...

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Aug-2015 12:29 am
கவி படித்து மனம் மகிழ்ந்தேன் 26-Aug-2015 11:43 pm
எழுத்துப்பிழை தவிர்க்கவும் !! 26-Aug-2015 9:08 pm
மதுராதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2015 7:17 pm

உன் பாதத்தில் நான் எழுதும் கவிதையால் தான் நீ எழ வேண்டும்...

நீ குளித்த தண்ணீரின் வருகைக்கு நம் பூந்தோட்டம் காத்திருக்கும்...

உனக்கு உணவளிக்க என் ஐந்து விரல்களும் தவம் இருக்கும்...

உன் தலையை வருடி விட எனக்கு நீண்ட நாள் கனவு...

என் கண்ணுக்கு இடும் மையை எடுத்து உன் கன்னத்தில்
ஒரு புள்ளியாய் இட ஆசை

உன்னை யாரும் கண் போட்டு விட கூடாது என்று...

உனக்கு முன் வாசலில் சென்று கதவில்
நீ முட்டி விட கூடாது என்று
கை தாங்கி நிற்க ஆசை...


உன்னோடு இருசக்கர வாகனத்தில்
உன்னோடு பணிக்கு செல்லும் போது
கண்ணாடி வழியே உன் முகம் பார்க்க ஆசை...

அலுவலகம் வந்ததும் உன்னை கண்ணோடு கண் பார்த்

மேலும்

உண்மைதான் தோழமையே... கொஞ்சம் எழுத்து பிழைகளை பாருங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Mar-2015 1:27 am
மதுராதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2015 5:23 pm

அறுத்தெறிந்த தொப்புள் கோடி
சிதறிய ரத்தத் துளி
பிஞ்சுக் கால்களின் ஆனந்த உதைப்பு
எத்தனை இன்பம் படைத்தாய் இறைவா பெண்ணுக்குள்
இனி பிறப்பென்று ஒன்றை படைத்தால்
பெண்ணாய் படைப்பாயாக
மீண்டும் தாய்மையின் தன்மையை உணர...

மேலும்

மதுராதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2015 5:03 pm

அனைவரும் காதலித்த பிறகே
கவிதை எழுதுவார்கள்...

ஆனால் உன்னை காதலித்த பின்
நீயே என் கவிதையடா...

கவிதையை நேசித்த நான் உன்னையே சுவாசித்தேன்...

நீ விட்டுச் சென்ற பின் கவிதையும் என்னை நேசிக்கவில்லை...

இன்று கவிதை எழுத முயன்றேன் நானோ!!!

என் பேனாவின் வார்த்தைகளோ
சிறு சிறு சிணுங்கலுடன்
சின்ன சின்ன தவறுகளுடன்
உலா வருகிறது என் கவிதை வானில்...

மேலும்

மதுராதேவி - மதுராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2015 10:13 pm

என் கவிதைளை எழுத
கடவுள் கொடுத்த அழகிய ஏடு தான் உன் பாதம்...
என் கவிதைகளை உன் அழகிய பாதத்தில்
சமர்பிக்க கொடுத்த தூரிகை தான்

-நம் காதல்...

மேலும்

நன்றி@rkumar 09-Mar-2015 8:00 am
நன்றியை சொல்ல வார்த்தையின்றி தவிக்கின்றேன்.... 09-Mar-2015 7:59 am
நான் கவிஞன் ஆனது உம் வரிகளை படிக்கத்தான் மனதை வைத்திருப்பது மிக அழகிய வரிகளை ரசிக்கத்தான் -தோழி உமது வரிகளின் வருடல் ஆஹா கோடி தடவை சொல்லலாம்- 08-Mar-2015 10:35 pm
kavi nanru 08-Mar-2015 10:30 pm
மதுராதேவி - மதுராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2015 9:40 pm

காயங்களுடன் விட்டுச் சென்றவனே!!!!!!!!!!!!!!!!!!
என் மனம் உன்னை வெறுப்பதில்லை...

என் இதயத்தின் உள்ளே
அழகாய் அமைதியாய்
தூங்கிக்கொண்டிருக்கிறாய்
என்று என்னை நானே
சமாதானம் செய்து கொண்டிருக்கின்றேன்...

--------------------------------இப்படிக்கு

என்றாவது ஒரு நாள்
பேசுவாய் என்று
கல்லறைக்கு தூங்க செல்லும்
உன்னை காதலித்த
அழகிய முட்டாள் நான்...

மேலும்

நன்றி தோழரே... 07-Mar-2015 12:09 pm
அருமையான கவிதை! 06-Mar-2015 10:24 pm
மதுராதேவி - மதுராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2015 9:09 pm

என் இதயத்தையும்
வெறுக்கிறேன்...

என்னை விட்டுச் சென்ற
உன்னை வெறுக்கும் போது...

என்னுடன் இருக்கும் இதயம்
உன்னை எப்படி வெறுக்கும்
என்று யோசித்து பார்த்தேன்????

இப்பொழுது தான் புரிந்தது

என்னை விட்டுச் சென்ற
நீ...

என் இதயத்தை துண்டு துண்டாய்
வெட்டிச் சென்றிருக்கிறாய் என்று...

மேலும்

நம்பிக்கையில் என் கவிதைகளுடன் நான்...@king247 07-Mar-2015 12:08 pm
நன்றி தோழரே @ mohamed 07-Mar-2015 12:07 pm
காயங்கள் ஆறட்டும் 06-Mar-2015 10:26 pm
ஆஹா மிக அருமை கவி வரிகள் ரொம்ம பிடித்திருக்கு 06-Mar-2015 10:02 pm
மதுராதேவி - மதுராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2015 9:47 pm

காயங்களுடன் விட்டுச் சென்றவனே!!!!!!!!!!!!!!!!!!
என் மனம் உன்னை வெறுப்பதில்லை...

என் இதயத்தின் உள்ளே
அழகாய் அமைதியாய்
தூங்கிக்கொண்டிருக்கிறாய்
என்று என்னை நானே
சமாதானம் செய்து கொண்டிருக்கின்றேன்...

--------------------------------இப்படிக்கு

கல்லறைக்காவது வந்து என்னுடன்
பேசுவாய் என்று நம்பும்
உன்னை காதலித்த
அழகிய முட்டாள்...

மேலும்

nandri natbe... 07-Mar-2015 12:04 pm
ஆஹா நட்பே! மிக அருமை மனதை வலிக்க செய்யும் வரிகள் 06-Mar-2015 9:58 pm
நன்றி நண்பரே... 06-Mar-2015 9:57 pm
கல்லறைக்காவது வந்து என்னுடன் பேசுவாய் என்று நம்பும் உன்னை காதலித்த அழகிய முட்டாள்... அற்புதம்.... 06-Mar-2015 9:55 pm
மேலும்...
கருத்துகள்

மேலே