விக்டர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விக்டர் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 0 |
உயிரே...
உண்மை அன்பினை பிரிவில்தான்
உணர முடியும் என்கிறார்கள்...
என்னை நீ பிரிந்திருக்கும்
இந்த நாட்களில் கூடவா...
என் அன்பினை நீ
உணரவில்லை...
உனக்காக நான் கண்ணீர்
சிந்துகிறேன்...
நீ எனகாகவாவது
ஒரு புன்னகை சிந்தேன்...
உன்னை நான் காணும்
அந்த நிமிடத்தில்...
நீ கொஞ்சம் சிரித்தாலும் நான் சந்தோசம்
கொள்வதோ எல்லை இல்லையடி...
உனக்காக என் கால விரயத்தை
கடிகாரம் மட்டுமே கண்டு கொள்கிறது...
ஒரேயொரு புன்னகை
கொடு...
நான் உன்னை
பார்காதபோதாவது...
உன் புன்னகையின்
வாசம் போதுமடி எனக்கு...
என் வாழ்வு
மண்ணில் நிலைத்திருக்கும்வரை.....
சாதி,மதம்...
புறாக்கள் இரண்டு சாதியையும்
மதத்தையும் மறந்து...
காதலித்த புறாக்கள் இரண்டு
மணமாலை சூடியது...
வேடனின் அம்புபாய
பிரிந்தது புறாக்கள்...
ஒரு புறா பிரிந்து செல்ல மறுபுறா
கூண்டுக்குள் அடைபட்டது...
கூண்டின் வேதனை
தாங்காத புறா ஒன்று...
உயிரை மாய்த்து
கொண்டது...
சந்தர்பத்திற்காக காத்திருந்த
வேடர்கள் அடித்து கொண்டனர்
ஒருவரை ஒருவர்...
ஆரமித்ததோ கலவரம்
தடுத்து நிறுத்த யாரும் இல்லை...
மெளனமாக வேடிக்கை பார்த்தது
பெரிய வேடர்களின் கூட்டம்...
பிரிந்த புறாக்களை கண்டு சந்தோசம்
கொண்ட வேடர்களின் கூட்டம் எது...
துயரம் கொண்ட
வேடரின் கூட்ட
அன்பே இன்று ஒரு நாள் நான் உன்னிடம் பேசாமல் உடைந்து போய் விட்டேன்
மனதால் உதிர்ந்து போய் விட்டேன்
கண்ணீரால் கரைந்து போய் விட்டேன்
இன்னமும் நீ கானமடி மானே.
உன்னைச் சுமந்த செறுப்போடு...
உன்நினைவைச் சுமந்த என்இதயம்
தவம் செய்து கிடக்கின்றது
என்னைப் பிரிந்த காதலியே..
உன்னைத் தூக்கி சுமப்பதற்கு...
பிரம்ம முகூர்த்தம் முடிந்து
அடுத்த ஷிப்டுக்காய் முகம்
சிவக்கும் கதிரவன்..
கிழக்கு நுழைவாயில் நோக்கி
கறுப்புச் சீருடை கழற்றும்
இரவுக் காவல்காரன் !
நகரத்தார்களின் பகலுணவாய்
மாறப் போவதையறியாமல்
கீச்சிக் கொண்டிருக்கும் பஞ்சுப்
பொதிக் கோழிகள் ஏற்றிய
வாகனங்கள் தூக்கக்கலக்கத்தோடு
நகர எல்லைக்குள் நுழைந்தன !
கொசுவிரட்டிப் புகை வியாபித்த
நுரையீரலுக்கு புத்துயிர் கொடுக்க
கொஞ்சமாவது நல்ல காற்றுக்காய்
"இப்போ இல்லேன்னா எப்போ"
பாடலை செவிக்குள் நுழைத்தபடியே
வீறுநடை பழகினர் நகர மாந்தர் !
நன்றி விசுவாசத்தோடு
சங்கிலியை இழுத்து கொண்டு
எஜமானர்களோடு காலைநடை
பயின்று போய