எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீண்டாமையையும்
சாதியையும் அகற்ற
சாஸ்திரங்களின்
உதவியை நாடுவது
சேற்றை சேற்றால்
கழுவுவது போன்றதே ஆகும்.

----புரட்சியாளர் அம்பேத்கர். (15.08.1936)

மேலும்

தீண்டா வகுப்பில் தனை சேர்த்தவனும் தீண்டிட சட்டம் வகுத்தவர் 15-Jun-2015 7:56 am

ஈசனே ஆயினும்
குற்றம் குற்றமே என்று
நேருக்கு நேர் நின்று வாதிடத்துணியும்
கலகக்காரர்களாலேதான்
இந்த உலகம் வாழ்கிறது.

----புரட்சியாளர் அம்பேத்கர்.

மேலும்

இதுவரை நமது நாட்டில்
செய்யப்பட்டு வந்த
சீர்திருத்தம் என்பதெல்லாம்
பாமர மக்களை
படித்தவர்களும் பணக்காரர்களும்
ஏய்ப்பதற்கு கண்டுபிடித்த
ஒரு சூழ்ச்சியே ஒழிய
உண்மை சீர்திருத்தமல்ல.

------தந்தை பெரியார், குடி அரசு 1930.

மேலும்

உன்னை சத்திரியன் என்றோ
வைசியன் என்றோ
நீ சொல்லிக்கொள்ளும்போது - நீ
பிராமணன் என்பவனுக்கு
கீழ்பட்டவன் என்பதை
நீயே ஒப்புகொண்டவனாகிறாய்.

------தந்தை பெரியார், குடி அரசு 1930.

மேலும்

எதாவது ஒரு
குறிப்பிட்ட மதத்தில் இருந்தால்தான்
கடவுள் அருளோ, மோட்சமோ கிடைக்கும்
என்கிற விடயத்தில் எனக்கு சிறிதும்
ஒப்புதலோ நம்பிக்கையோ கிடையாது.

---------தந்தை பெரியார், குடி அரசு 1930.

மேலும்

எந்த முறையிலாவது
புராணப் பண்டிதர்களை
பொதுமக்கள் ஆதரிப்பார்களேயானால், அது
கொள்ளியை எடுத்துத்
தலையை சொரிந்துகொள்வது போலாகும்.

-----------தந்தை பெரியார், குடி அரசு 1930.

மேலும்

கடவுள் ஒருவர்
உண்டு என்றுச் சொல்லிக்கொண்டு
தொட்டதற்கெல்லாம்
கடவுள்மீது பழிபோட்டுக்கொண்டு திரிபவன் மூடன்.

--------------தந்தை பெரியார், குடி அரசு 1930.

மேலும்

அப்படியென்றால் நான் மகா மூடன் ........! 11-Jun-2015 6:18 pm
வேறு யார் மீதும் பழி போட முடியாதே . வம்பில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கத் தான். 10-Jun-2015 9:46 pm

கடவுள்
மதம்
சாஸ்திரம்
இம்மூன்றும்
சாதியை வளர்க்குமேயொழிய
சாதியை ஒழிக்காது.

மேலும்

பத்துமாதத்துக் கைக்குழந்தையை
கக்கத்தில் வைத்துக்கொண்டு, சாமியைக்காட்டி
அதை கும்பிடு என்று கைக்கூப்பச் செய்வதைவிட,
இருபது வயது வாலிபனைப் பார்த்து - நீ
கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

------தந்தை பெரியார், 1930.

மேலும்

கடவுள் என்பது ஒரு தற்காப்பு நடத்தை எமன் சார் ......! கமல் சொல்வது போல " கடவுள் இருக்காரா இல்லையா தெரியாது ......ஆனா அப்படியொருத்தர் இருந்தா நல்லாயிருக்கும் " 10-Jun-2015 7:42 am

சுயமரியாதைக்காரர்கள்
கடவுளை ஒழிப்பதில்லை,
என்றையதினம் மனிதனுக்கு
ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ
அப்பொழுதே கடவுள் செத்துப்போய்விட்டது.

-----தந்தை பெரியார், 1930.

மேலும்

மேலும்...

மேலே