ஹாசினி- கருத்துகள்
ஹாசினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [35]
- சு சிவசங்கரி [12]
- Dr.V.K.Kanniappan [10]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
கற்றாழையில் காயம் பட்டால் கருகாதேன்று யார் சொன்னது? காயம் பட்ட இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கருகும் தன்மை கொண்டது! காற்றைக் குடித்து வாழ்வது உண்மை! படைப்பு அருமை!
வரலாறு மோசமாவது நல்லதின் அடையாளமல்ல காலத்தின் கட்டாயத்தினால் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன! அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது!
யாரும் பிறக்கும் பொழுது கவிஞராகவோ எழுத்தாளராகவோ கருவிலிருந்து வருவதில்லை! உலகில் வந்த பிறகு அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுவதுதான்!
எப்பொழுதும் பெற்றவளுக்கு தன பிள்ளையைப் பார்க்கும் பொழுது ஆச்சரியம் தான் அப்படியே நிஇங்கள் கருவில் சுமந்த குழந்தையை கவிதைகளாக பிரசவிக்கும் அவைகளைப் பார்த்த சந்தோசம்!
உங்கள் கவிதைக் குழந்தைகளை நல்ல ம்முரையில் அறிமுகப் படுத்துங்கள் தோழா!
பார்க்கின்ற பூவெல்லாம் பறிக்கத் துடிப்பவன் உண்மை மனிதனல்ல! அதற்காக ரசித்துவிட்டு செல்வதும் தகாதது தான்! ஆனால் அதை தொகுத்து நான்கு வரிகளில் அளித்து ரசித்து ரசிக்க வைத்தது நன்று!
எழுத்துப் பிழை இருக்கிறது கவனியுங்கள் தோழா!
ஒரு எளிய உரையாடலை கவிதையாகத் தொகுத்த விதம் அருமை! காற்றுக்குள் கரைந்து நாசிக்குள் புகுந்து சுவாசத்தின் வழி வெளிவருவது அருமையான சிந்தனை! கற்பனைக் கலந்த வரிகள்!
மங்கையிடம் மயங்காத மனிதர் எவரும் இலர் என்பதை அறியாத கன்னியோ? இல்லை பேச்சில் விழ வைக்க சாதுர்யமாக பேசுகிறாளோ என்பதை கண்டுபிடிக்க முயல வில்லையா?
கவிதைகளில் மயங்கிக் காதலிப்பவள் நிஜக் காதலியா என யோசிக்க வேண்டியதே! அதை வெளிப்படுத்தின விதம் அழகு!
................நீ என்னை காதலிக்கவில்லையே...!
==கவிதையின் திறன் என்பது
==ஒருநாள் மங்கி மடிந்துவிடலாம்.
==அன்று எதை என்னிடம் காதலிப்பாய் ? ......இவ்விடம் கவிதையின் தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது!
காத்திரு கணவனே என்று உறுதி மொழிக் கூறிவிட்டு தேடாதே என்ற முடிச்சையும் இட்டுச் செல்கிறாள்! கவிதைக்கு பொய்யழகு என்பதை உணரா மடந்தையை அறிமுகப் படுத்திய விதம் அருமை!
.............ஆனாலும் என் வேண்டுகோள் கொஞ்சம் சுருக்கி வார்த்தைகளில் மிகைப் படுத்துங்கள் நன்று!
வாழ்க்கையின் பாதையையும் பாதையின் வாழ்வையும் சொன்ன விதம் அருமை! வாழ்க்கைப் பாதையில் துன்பமும் துயரமும் பயணப் பாதையில் குண்டும் குழியும் சகஜம்! யார் யாரையோ தூக்கி சுமந்த வாழ்க்கையில் பாதியில் வருவோரை பாதியி இறக்கி விடுவது போல் சாலையோரங்களில் மரங்கள் வெட்டப் படுவதும் பின் நடப் படுவதும் வாடிக்கையே!
எந்த ஒரு உறவையும் அலுப்புடன் அழைத்துச் செல்லுதல் வாழ்வில் நிச்சயம் ஆனந்தம் தராது அதுபோல் பயணங்களும் அப்படித்தான் ஒரு ரசித்தல் தன்மையுடன் மேற்கொள்ளப் படாவிட்டால் வெறுப்பே மிச்சமாகும்!
யார் சுமையையும் யாரும் சுமக்கவும் முடியாது இறக்கி வைக்கவும் முடியாது! தன சுமையை தான் சுமப்பதே பெரும் பாடாகிவிட்டதே! அப்படியே சுமக்க ஒரு ஆள் கிடைத்தாலும் ஒத்துக் கொள்ளுமா உலகம்?
உணர்வுச் சாலைகளில்
அனைவரிடமும் சுமைகள்
அதிகமென்கிற போது
யார் மடியில்
யார் இளைப்பாற ?.....மொத்தக் கவிதையின் பிரதிபலிப்பும் இவ்வரிகளில் தெளிவாகிப் போகின்றன!
சரி படத்திற்கும் கவிதைக்கும் தொடர்பு என்ன என்பதை சற்று விளக்குவீர்களா? தோழா?
கொண்டு சேர்க்கும் விதம், தோழா என்று படிக்கவும்
பலதடவை இப்படங்களின் தொகுப்பை தொலைக்காட்சியில் காண்பித்து நீலப் படங்கள் பர்ர்த் தெரியாத பிஞ்சு உள்ளங்களுக்கும் கூட படுக்கையறைக் காட்சிகளை அம்பலப் படுத்தி விட்டனர்!
காவி உடுத்தினவனுக்கு காமம் இருக்கக் கூடாது என்ற நியதி இல்லையே! மனிதனாய் பிறந்த எவனும் காமம் என்ற கடலில் நீந்தாமல் வெளியேற முடியாது! எவனொருவன் காமத்தையும் கரை கண்டு ஜெயிக்கிரானோ அவன் தான் ஞானி! ஆடி அடங்கும் வாழ்க்கை என்ற சொல்லைக் கேள்விப் பட்டதில்லையா?
ஆடாமல் அடங்கினால் அவன் ஒன்றுமே அறியாதவன்! நித்யாவைப் பொருத்தவரை அவர் சொன்ன வார்த்தை தவறானது "உடலுறவில் ஆராய்ச்சி செய்கிறேன்" என்ற தவறானதே ஒழிய ஒருவரின் சொந்த வாழ்க்கைக்குள் நுழைய மற்றொரு மனிதனுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது!
உங்களுக்கு தேவையென்றால் அவரின் போதனைகளைக் கேட்க வேண்டும் இல்லையெனில் விலகி விற்க வேண்டும்! அது உங்கள் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது!
உங்களின் அழகான கவிதை வரிகள் இந்தப் படத்தினால் பாழ்பட்டுப் போனதே நண்பா! ஒவ்வொரு வரிகளும் முத்து முத்தானவை அவற்றின் சாராம்சம் ஒவ்வுன்ரும் அருமை! கவிதை எழுதுவது பெரிதல்ல அதை மற்றவர்களிடம் கொன்னு சேர்க்கும் விதம் சரியாக இருந்தால் மட்டுமே உங்களையும் உங்கள் கருத்துக்களையும் உலகம் ஏற்றுக் கொள்ளும்! தொழ!
இப்பொழுது கண்டிப்பாக சாதிப் பெயரை குறிப்பி வற்புறுத்த வேண்டாம் என்று அரசாங்கம் உத்தரவு பிரப்பித்துள்ளதே! அதை நீங்கள் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களைப் ஒன்ற படைப்பாளிகளின் படைப்புக்களுக்காகவே ஜாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ? ஜாதிகள் ஒழிந்து விட்டல் உங்கள் பேனாவிற்கு ஏது வேலை! நீங்கள் எழுத்தாளராய் உன்னத இடம் பிடிக்கும் வரை பாழாய்ப் போன சாதிகள் இருந்துவிட்டுப் போகட்டும்! சரிதானே!
வார்த்தைகள் தேடித் தேடிக் கோர்க்கப் பட்டிருக்கின்றன! வஞ்சக ஏணியில் பயணம் செய்யும் மனசாட்சி பற்றின உங்கள் வரிகள் அருமை! இன்னும் கொஞ்சம் நயம் பட உரைத்திருக்கலாமொவேனத் தோன்றுகிறது! முன் பக்கத்தில் கவிதை கண்டேன்! படித்துவிடலாமே என்ற ஆவல் ! உள்ளே வந்தால் வைரமுத்துவின் சாயல்! படிப்பது நல்லது படைப்பது இன்னும் நல்லது! ஆனால் நாம் என்ன எழுதுகிறோம் எதற்கு எழுதுகிறோம் என்ற தெளிவு இருப்பது மிக மிக அவசியம்! உங்கள் கவிதை படித்த பின் யாரையேனும் சிந்திக்க வைக்க மன சாட்சி பேசுமாயின் அது உங்கள் கவிதைக்கான வெற்றியே!
இந்த கவிதை வரிகளின் சாயலை வைரமுத்துவின் "மௌன பூகம்பம்" என்ற கவிதையில் படித்திருக்கிறேன்!
இன்றைக்கு
இப்படியொரு சந்திப்பு
நிகழுமென்று
நாமிருவரும்
நினைத்திருக்க மாட்டோம் !
எவனோ ஒருவனின்
மனைவியாக நீயான பின்பும் -
எவளோ ஒருத்தியின்
கணவனாக நானான பின்பும் -
கால வெள்ளத்தில்
எதிரெதிர் திசையில்
அடித்துச் செல்லப்பட்டவர்கள்
ஒரு கோடைகால
ரயில் பிரயாணத்தில்
எதிர் எதிரிருக்கையில்
கரையொதுக்கப் பட்டிருக்கிறோம் ! .....இது உங்கள் வரிகள்!
பன்னிரண்டு பாலைவன
வருஷங்களுக்குப் பிறகு
அவன் அவளைப் பார்க்க நேரிடுகிறது
எங்கெனில்
ஒரு ரயில் நிலையத்தில்
எப்போதெனில்
ஒரு நள்ளிரவில்
எதிரெதி திசையில் செல்லும் ரயில்கள்
இளைப்பாரிக் கொள்ளும் அந்த இடைவெளியில்
ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன!
......இது வைர முத்துவின் வரிகள்!
ஆனால் அக்கவிதையின் சாயல்கள் தெரியா வண்ணம் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பயணிக்கிறது உங்கள் பயணம்! கவிதை படித்ததின் வெளிப்பாடை கவிதை படைப்பதில் காட்டியது அருமை!
இது கவிதையா? கட்டுரையா? வார்த்தைகளைச் சுருக்கி அதற்கு வலிமையையும் வளமும் சேர்த்து ஒரு வார்த்தை பல பொருள் தர எழுதுவது கவிதை! அப்போ இது..................??? படித்ததுடன் மனதில் பதிய வேண்டும்! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்ட வேண்டும் நல்ல ஒரு கவிதை படிக்க இத்தளத்திற்குள் வந்தால் கட்டுரைகளை படிக்க வேண்டியிருக்கு!
உன்கள் சிந்தனைகள் அழகாக இருக்கிறது கவிஞரே! எழுத்துக்களின் கோர்வையும் நன்று ஆனால் சொல்ல வேண்டிய விஷயங்களை இப்படி சுற்றுவது ஏனோ?
நல்ல சிந்தனை! தாய் என்பவள் ஒரு கருவை சுமக்கும் பொழுது பல வேதனைகளுடன் சுமந்து இவ்வுலகிற்கு அப்புதிய சிசுவை அறிமுகப் படுத்துவாள்! கணவன் எனும் கள்வன் சரியில்லாது போனால் அவள் நிலைமை கவலையளிக்கக் கூடியதே!
ஆனால் அவள் பிள்ளையை வளர்க்கும் பொழுது அவளின் துன்ப நிலையச் சொல்லி வளர்க்கிறாள்! அவன் வளர்ந்து என்னைத் தாங்குவான் நம்பிக்கையின் தட்டை கையேந்தி நிற்கிறாள்! அப்பிள்ளை இத்தாயை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் என்பதே என் அவா!
எல்லாத்தாய்மார்களும் இப்படி எதோ ஒரு கஷ்ட நிலையில் தான்இல்லை வளர்க்கிறார்களோ?
அதற்காக நாலடியில் எழுதுவதா?
இனியும் ஒரு குழந்தை பெற்றோர்கள் இன்றி அழுதால்
இல்லாமல் போகட்டும்
மனித வர்க்கம் ....சிந்திக்க வேண்டும் மனித வர்க்கம்