Balakarthik Balasubramanian- கருத்துகள்
Balakarthik Balasubramanian கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [30]
- Dr.V.K.Kanniappan [19]
- யாதுமறியான் [17]
அருமையான கதை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். காதலை சொல்லும்முன் இவ்வாறு ஒரு நொடி யோசித்தாலே போதும், காதல் பெரிதா? குடும்பம் பெரிதா? எனும் உணர்வுக்கான பதில் நமக்கு கிடைக்கும் கண்டிப்பாக. அருமை....
சூப்பர் தோழா. அருமையான கதை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
ஹா ஹா... குறுங்கதையில் உங்கள் உணர்ச்சிகளின் வெளிப்பாடு மிகவும் அருமை தோழரே. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து முயற்சியுடன் நல்ல பதிப்புகளை தர என் வாழ்த்துக்கள். அப்பொழுது நான் அருமை என கூறுவே எனவும் நான் நம்புகிறேன். உங்கள் எதிர்காலத்திற்கு என் வாழ்த்துக்கள் தோழா.
ஹா ஹா துளசி வாசம் மாறும். ஆனா தவசி வாசம் மாறாதுனு சொல்லிடுவிங்களோனு நெனைச்சேன் நான். அருமையான சிறுகதை. வாழ்த்துக்கள் தோழா
அருமையான கதை. நொடி பொழுதில் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளராக மாறி அருமையான படைப்பை தந்துள்ளீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொடர்ந்து கற்பனை கதைகளை எழுதி உங்கள் வாசகர்களை மேலும் கவருங்கள். வார்த்தைகள் வர மறுத்து அடம் பிடிக்க, சிரமம் கொண்டு என் உணர்ச்சிகளை எழுத்து வடிவில் தந்துருக்கிறேன். வாழ்த்துக்கள் தோழா....
மிக்க நன்றி தோழரே. கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன். என் கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....
வேண்டுமடா வேங்கை ஆட்டம்
--------------------------------------------------------------------
கட்டி வச்ச எங்க தெய்வம்
சுத்தி சுத்தி மிரட்டுமடா
தட்டி வச்சு மறைச்சாலும்
பாய்ஞ்சு வந்து துரத்துமடா
பொத்தி வச்ச ஆசை எல்லாம்
காட்டுனோமே ஒன்ன பார்த்து
கொடுமையாடா செய்ற என்று
கேட்டாங்களே என்ன பார்த்து
மாத்து துணி ஆசை இல்ல
மாலை ஒன்னு வாங்கி போட்டேன்
நான்கு எழுத்து எதிர்ப்ப காட்ட
நம்பிக்கைய தாங்கி போனேன்
உன்னை பத்தி தெரியாமலே
உயிர் கொடுக்க பேசினானே
கலாச்சாரத்த கலங்க படுத்தி
பொய் வண்ணம் பூசினானே
இயற்கை செத்து மடியுதடா
செயற்கை பொழுதாய் விடியுதடா
வருசம் வருசம் முதல் மாசம்
வாசல் பார்த்து காத்திருக்கேன்
வழி ஒன்னு பொறக்காதானு
சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன்
வேண்டாமடா வம்பு சண்ட
எங்கக்கிட்ட வேண்டாமடா
பாசத்துக்கு பணிஞ்சு போவோம்
வேசம் மட்டும் போட்டுடாத
தெரிஞ்ச பிறகு துணிஞ்சு போவோம்
வீரம் பொறந்த மண்ணு இது
பாசம் வைக்கும் கண்ணு இது
கொம்பு வச்ச எங்க தெய்வம்
கொழந்தைய பார்த்தா துடிச்சு போகும்
மண்டியிட்டு வணங்கி பாரு
உண்மை என்ன உனக்கு தெரியும்
பாசம் மட்டும் கொண்டதால
பகை மறந்து போராடுறோம்
மாமன் மச்சான் சண்டை மறந்து
மதுரை முழுக்க போராடுறோம்
சேர்ந்து வந்த மக்களால
சென்னையிலும் போராடுறோம்
கூடி வந்த கூட்டத்தால
கோவையிலும் போராடுறோம்
நல்லதொரு எண்ணம் கொண்டு
நாடு முழுக்க போராடுறோம்
சேர்ந்துட்டோம்டா நாங்க ஒன்னு
இனிமேலும் எதிர்ப்பியா நின்னு
வாழ வைக்கும் தமிழ் நாடு
எங்களுக்கு மட்டும் எதிரியா
இனிமேலும் பொறுக்கமாட்டோம்
பொங்கி எழும் நேரம் இது
- We need Jallikattu