budhdhimaan- கருத்துகள்

அடடா! தன்னை சரி வர உணர்ந்தவரே தங்களை வந்தடையும் புகழாரத்திற்கு இவ்வாறு ஒரு நன்றி தெரிவிக்க இயலும் என்பது என் கருத்து!

தங்களின் தெளிந்த இவ்வெழுத்தை வாசித்து மெய் சிலிர்ந்தேன் என்று நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்பினேன்!

வாழ்த்துக்கள் தோழரே!

காற்றில் சிறகுகள் அதன் திசையில் மிதந்ததைக் கண்டேன்!
நீர்மேல் காகிதக் கப்பல் மிதந்ததைக் கண்டேன்!
இவ்வரிகளின் மேல் நான் சரகுகள் போலே மிதப்பதையும் கண்டேன்!

என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்!
என்று மடியும் இந்த வாழ்வின் மோகம்!

தாகத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி நண்பரே!

தங்கள் கருத்திற்கு நன்றி, அன்பரே!

இதைச் செதுக்கினேன், நம்பிக்கையுடன், தாங்கள் போன்றவர்கள் மேல் , ஓர் நாள் வரும் என்று!

இன்னொரு பாரதி வேண்டாம் நம் நாட்டிற்கு, ஒரு பாரதியின் கருத்துக்களே இன்னும் நம் மக்கள் எண்ணத்தில் நின்றதாய் தோன்றவில்லை, வெறும் எழுத்துக்களாய் அல்லவா போனது.

அருமை என்றால் "அருமை"!

கதாப்பாத்திரங்கள் - கதைக்கான மிகச்சரியான பொருத்தம்!
திரைக்கதை - திரை தெரியாமல் நிஜம் போல ஓடியது கண் முன்னே!
வசனம் - வசூல் செய்தது அனைவரின் அடக்க முடியாத சிரிப்பை!
நகைச்சுவை - நகை சுவையாக மட்டுமல்ல காயத்தை ஏற்படுத்தியது நகைத்து விழுந்ததில்!

மொத்தத்தில் நூற்றுக்கு நூறு - போதாது!

கருத்துக்கு நன்றி நண்பரே!
விடையொன்று கிடைத்தால் மட்டும் மனமதை ஏற்குமோ?!

நரை என்பார் திரை என்பார்
முதுமை அடைந்தோ மென்பார்!

நரை முடியோர் பெருமை பட
அர்த்தம் பல தந்தீரே!

அருமை தங்களது கோணம்
எளிமை தங்களது கானம்
புதுவடிவம் எழுத்துக்கள் மொத்தம்

வெற்றி பல வாழ்த்தும் - விவேக்!

வாழ்த்துக்களுக்கு நன்றி!

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!
கவிதையின் கடைசி வார்த்தை, 'நிறுத்தம்' என்பதை கவனிப்பவர்கள் எத்துனை இருக்க முடியும்?

கவிதைக்கு கரு கொடுக்க உண்டு பல இவ்வுலகினிலே,
கவிஞனுக்கு ஊக்கம் கொடுக்க நண்பர்கள் போல யாருமுண்டோ!

மிக்க நன்றி கணேஷ்!

உங்களுக்கு ருசியான கவிதையாய் அமைந்ததில் எனக்கும் உண்டு பெருமை!

எதற்காக எங்கே செல்கின்றோம் என்று தெரியாமல் ஓடும் இந்த மக்களிடையே சற்று ஓட்டத்தை நிறுத்தி சிந்தித்து சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். மக்கள் மறந்து விட்டார்கள் - போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தென்று.
இதைப் படிப்பவர்களும் தங்களது ஓட்டத்தை நிறுத்தி சிந்திப்பார்கள் என்பது உறுதி!
சிந்திக்க வைத்ததற்கு நன்றி :) ஆனால் உண்மையில் விடை தெரியவில்லை?!


budhdhimaan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே