மஅனிற்றா ஜான்சி- கருத்துகள்

ம்ம் அருமையான, அழகான பதில்...
நினைக்கும்போதெல்லாம் சென்று வாழ்ந்து பார்த்து வாருங்கள்,
வாழ்த்துகள்.....

ரசிக்கும் மனம் இருந்தால், பெண்கள் மட்டும் அல்ல அத்தனையும் அழகானவை தான்....

உறவினர்கள் ,நண்பர்கள், முகம் தெரியாத நபர் இப்படி எவரிடமாவது இருந்து எதாவது ஒரு செயலை மறைக்க நினைக்கிறோமோ அதனை செய்யக் கூடாது.

அழகை வர்ணிக்கும் போது. . என்று தெளிவாக கூறுகிறீர்கள். . அதற்குப் பெயர் வெறும் வர்ணனை மட்டுமே ஆனால், "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்று ஒரு பழமொழி கூறுவார்களே அந்த முகத்தில் தெரிவதாக கூறுவது மனதின் மகிழ்ச்சியை தான் கூறுகிறார்கள், அதாவது நாம் முகத்தில் காட்டக்கூடிய புன்னகை.
இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால்,
இவர் சுடுமூஞ்சி, இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், இவர் இப்போது கோவமாக இருக்கிறார். . .
இதில் குறிக்கப்பட்டுள்ள (எ.கா) கள் குறிப்பது ஒருவரின் அப்போதைய மனநிலையை தான்.
எனவே நமது குணத்தின் அழகை நமது முகமே காட்டி கொடுத்துவிடும்.
எனவே அழகு என்பது புறத்தில் இல்லை மனதின் தூய்மையே.

உண்மையை அடித்துச் சொன்னீர்கள்...!

மயிலிறகை அளவுக்கதிகமாக ஏற்றி அச்சு முறிந்தே போனாலும், ஒரு மனிதனுக்கு அவனது திறமையால் கிடைக்கின்ற நற்புகழ் என்கிற மாமகுடம் என்றும் இற்று உடையாது.

என்பது எனது எண்ணம், இருந்தாலும் சரியான பொருளா என்று தெரியவில்லை ஐயா, விளக்கமளியுங்கள்...

குறள்:
"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்"
பொருள்:
வண்டியில் ஏற்றப்படும் பொருளானது மயிலிறகாகவே இருந்தாலும் கூட அளவாகவே ஏற்ற வேண்டும், அளவிற்கதிகமானால் வண்டியின் அச்சு முறிந்து விடும்.

[பீலி - மயிலிறகு, அச்சிறும் - அச்சு முறிந்து விடும், சால - அதிகமான, பண்டம் - பொருள்]

திரண்ட கருத்து:
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"

தங்கள் வாழ்த்திற்கும், கருத்திற்கும் நன்றி தோழரே...!

உண்மைதான் தோழரே...
பெற்றோருக்கு பல தேவைகள் இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டார்கள்...
அது தெரிந்தாலும் அதை பூர்த்தி செய்வதற்க்கான வாய்ப்புகள் அநேகருக்கு கிடைப்பதில்லை...
அருமையான கதை... வாழ்த்துகள்...!

அருமையான கதை! ஆனால் நிஜம், இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்...
வசதி, மற்றும் நமது மற்ற உறவுகள் அனைத்தும் கடந்து போனபின் திரும்பி பார்த்தால் உன் பெற்றோர் உனக்காக மட்டுமே ஏங்கிக் கொண்டு காத்திருப்பார்கள். உன்னிடமிருந்து எதையுமே எதிர் பார்க்காமல்...

எதற்கும் ஈடு இணையற்ற ஒரு உறவுதான் தாய், தந்தை உறவு...

ம் ம் முயற்சி செய்து பார்ப்போம்

ஹா... ஹா... ஹா...
பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமே
அதுபோல...

கருத்தளித்தமைக்கு நன்றிகள் அய்யா...

முயற்சி செய்து பார்த்தது உண்டா?

கூகுளில் பார்க்கலாம், ஆனால் ஒரு விடயத்தை பற்றி அனுபவத்தால் கூறும் கருத்து நம்பகத்தன்மை உடையதாக இருக்குமே என்று எதிர் பார்த்தேன், தங்கள் கருத்திற்கு நன்றிகள் அய்யா...


மஅனிற்றா ஜான்சி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே