anandhan- கருத்துகள்

என் மொத்த உலகின்
தெருவெல்லாம் தொலைந்திட
நான் அமைத்த ஒற்றையடிப்பாதையில்
நாடோடியென நான் திரிய
முடிவில் முடிவாய்
நீ நின்றிட.........!


எப்புடி இந்த மாதிரி விஷயங்களை யோசிச்சிங்க .ரொம்பவே ஈர்த்தது இந்த வரிகள்

இந்த பாடலினால் கடுப்பாகி என்னை அடிக்க வேண்டும் என்று நினைத்தால் 08807239129 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்...ஏனெனில் எனக்கு கவிதைகளை பகிரவும் கலந்துரையாடவும் நண்பர்கள் இல்லை ...

மன்னிக்கவும் நண்பர்களே கொஞ்சம் கால தாமதம் ஆகி விட்டது .இந்த பாடல் தவறாக இருந்தால் தாராளமாக கூறலாம்.என் கண்களுக்கு தெரியாதவை உங்கள் கண்களுக்கு தெரியும் அல்லவா....காத்திருப்புகளுடன்
-ஆனந்தன்

தாதொத்த-பொன் போன்ற {தாது-பொன்,இதழ்,தேன்}
தாதொத்த-இதழ் ஒத்த
தத்தை-மங்கை
தத்தி-தத்தி விளையாட
தித்தித்து -இன்புற்று
தைத்த -பாதித்த
தீ -காதல் தீ
தத்தாதோ-பரவாதோ
தத்தி -சென்று
துதித்தேத்தி -புகழ்ந்து கூறி
தோதோதி-தோது ஓதி
தூதித்தே-தூது சொல்லியே
தாத்தா-என் தாத்தா
தைத்ததை- பாதிக்கப்பட்ட மனதை
தா- தரவும்

அதாவது,
பொன் போன்ற இதழ் கொண்ட மங்கை ஒருவள் தத்தி தத்தி தன் தோழிகளுடன் பாண்டி விளையாடுகிறாள் அப்போது அந்த வழி சென்ற தலைவன் அவளை கண்டு மயங்குகிறான் அவளை கண்டதால் இவனுக்குள் ஏற்பட்ட காதல் தீ உள்ளத்தில் இருந்து உடம்பெங்கும் ,உயிரெங்கும் பரவுகிறது ,அதனால் அவளை மனம் முடிக்க சம்மதம் கேட்டு அவன் தாத்தாவை தூது அனுப்புகிறான் ,அவ்வாறு அனுப்பகையில் ,அவன் தாத்தாவை அவனை பற்றி அவளிடமும் அவள் பெற்றோரிடமும் நல்ல விதமாக,பெருமையாக கூறி அவனை மனம் செய்யும் விதத்தையும் கூற சொல்லி அப்படியே அவளால் பாதிக்கப்பட்ட தன் மனதையும் அவளுக்கு பரிசாக தருமாறு கூறுகிறான்......
குறிப்பு :
(அவனுக்கு தாய் தந்தை கிடையாது,தாத்தாவுக்கு ஒரு கால் போரில் காயம் அடைந்ததால் அவர் நொண்டி நொண்டி தான் செல்வார்)

இது உங்கள் கவிதையா

நன்றி நல்ல உள்ளங்களே

மிக்க நன்றி நண்பர்களே


anandhan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே