வேறேதும் வேண்டமாட்டேன்

கடும் வரட்சிக்குப் பின்
மழைத்துளி மண்ணைச்
சங்கமிப்பதாய் - உன்
பார்வைகள் இவள்
பாலையாகிப் போன
வாழ்வில் ஈரலிப்பாய்!..

எதிர்த் துருவங்கள் ஒன்றை
ஒன்று கவர்வதன்ன...
நிலைமாறி கடல் நீரும்
மேகம் சேர்வதன்ன...
ஏற்றத் தாழ்வுகள் துறந்து
இணைந்தது நம் இதயம்!..

காதலன் விழியீர்ப்பில்
காற்றோடு பயணிக்கும்
ஒற்றைச் சருகானேன் நான்!..
அவன் முடுக்கிவிடும் தாளத்தில்
ஆட்டம் போடும் - விளையாட்டுப்
பொம்மையானேன் நான்!..

நீ என் வாழ்வின்
வேதமாகிப் போனாயன்பே...
வான் நிலவைத் தரிசிக்கும்
வரம் மட்டும் - மல்லிகைக்கு
அளிக்கப்பட்டதாய் - உனை
வாழ்நாளெல்லாம் கண்டால் போதும்.....
வேறேதும் வேண்டமாட்டேன்..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 10:15 am)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 30

மேலே