அம்மாவின் அவதாரம்...!!!!
எனக்கு இந்த பூமியை காண்பிக்க,
நீ எடுத்த மறு அவதாரம்,
அம்மா...!!!
எத்திசையில் இருந்து புயல் வந்தாலும்,
துன்பங்கள் உன்னை சூழ்ந்து நின்றாலும்
பரவாயில்லை என
உன் அன்பை தந்து என்னை பெற்றெடுத்(தாய்)..!!
நான் பிறக்க நீ பிறந்தாய்,
நான் தவழ நீ தவழ்ந்தாய்,
நான் நடக்க நீயும் நடந்தாய்,
நான் சிரித்தால் சிரிப்பாய்,
நான் அழுதால் நீ கண் கலங்குவாய்,
என எல்லாமுமே நானாக நீ இருந்தாய்..!!!
என்னை அழகாக்கி பார்ப்பதிலே
உன் நிலை மறந்தாய்..,
என்மேல் கண்பட்டுவிடாமல் இருக்க
உன் கண் மை கொண்டு காத்துநின்றாய்...!!
என் தவறுகளை பொறுப்பாய்,
பொறுமை கொண்டு பின் அடிப்பாய்,
அடித்த பின் முத்தம் பல தருவாய்,
உன் முத்தம் வாங்கவே
நான் செய்த தவறுகள் பல....!!!
எனக்கு எது பிடித்ததோ,
அதையே தனக்கும் பிடித்ததாக்கி
கொள்வது அவளின் பெருந்தன்மை..!!!
நான் பிறந்து "அம்மா" என்று
ஒருமுறை அழைப்பதற்குள்,
அவள் என்னை மகனே,மகனே என்று
மூச்சுகாற்றிற்கு பதில் என்னை சுவாசித்தாள்...!!
அவள் என்னை பிரிந்து இருந்ததில்லை,
என்னை யாரிடமும் விட்டு கொடுப்பதில்லை,
எத்தனை கடல் தாண்டி சென்றாலும்,
நான் இருப்பதென்னவோ அவளின்
கண்ணீருக்குள் தான்...!!!!
இவ்வளவு செய்த உனக்கு,
நான் என்ன செய்ய முடியும்,,???
நீ முதுமை என்னும் குழந்தை பருவம் வா..!!!
உன்னை தாலாட்டி தூங்க வைக்க
நான் எடுக்கிறேன் "தாய்" அவதாரம்..!!!