malar1991- கருத்துகள்

வாழ்க்கையின் புரிதல்.

நன்றி தமிழ். தமிழரிடை நிலவும் ஒற்றுமையின்மை, தன்மானம் இல்லாமை, மொழிசார்ந்த இன உணர்வு இல்லாமை, மக்களைவிட மதத்திற்கும், கடவுள்களுக்காவும் வரிந்துகட்டிக் கொண்டு வெறியாட்டம் போடுவோரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பது, பிற மொழி பேசும் மக்களிடம் இழிவாகப் படம் பிடித்துக்காட்டும் ஈனப்பிறவிகளும் நம்மிடையே. என்ன செய்வது? இளம் வயதினர் சிந்திக்கவேண்டும். தங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்.

இன்னலை வரவழைக்கும் இழிசெயல்களைத் தவிர்த்து இயற்கையைப் பேணுவோம். திருவிழா, இறுதி ஊர்வலம், திருமணம், பூப்பெய்தல், ரவுடத் தலைவர்களை வரவேற்க, இன்னும் அரசியல் கூட்டங்கள் இன்னும் பல நிகழ்ச்சிகளின் போதும் பட்டாசுகளை வெடிப்பதும், வண்ணப் பொடிகளைத் தூவதும் இயற்கைக்கு எதிரான செயல். அரிப்பு என்ற சந்தோசத்தை அடக்க கொள்ளிக் கட்டையை வைத்துத் தேய்க்கும் அற்ப மனிதர்கள். சடங்குகளின் பெயரால் உணவுப் பொருள்களை வீணடிப்பவரைப் பற்றிக் கூறினால் மதவாதிகள் குறுக்கிடுவார்கள். ரசிகப் பெருமக்கள் குடம் குடமாய் பேனர் மீது பாலாபிஷேகம் செய்து தங்களால் பிழைக்கும் இதயதேய்வங்களுக்கு காணிக்கை செலுத்துவார்கள். எந்த இதயதெய்வமும் அதைத் தவறு என்று சொல்லி தடைபோட வரமாட்டார்கள். இதுதான் இன்றைய தமிழகத்தின் இழிநிலை. உலகமே தமிழ் இனத்தைக் கேவலமாகப் பார்க்கும் நிலை.

சிந்திக்கத் தூண்டும் அருமையான படைப்பு.

அய்யா இது நச்சுமரம். கெடு தரும் அனைத்தையும் நசுக்கி எறியவேண்டும். பட்டாசு போன்ற வெடிப் பொருட்களை வெடித்தும் கொளுத்தியோம் ஆனந்தப்படுவோர் அனைவரும் இயற்கை அன்னையின் பகைவர்.

நாங்கள் வேளாண்மையில் ஈடுபட்ட 1950-60 களில் அரிதாகக் காணப்பட்ட இந்த நச்சு மரம் இறக்குமதியானாதாகத்தூன் இருக்கும். பல் தீட்ட உதவும் கருவேல மரத்தின் முள் காலில் ஆளமாகத் தைத்துக் கொண்டால் கூட முள் குத்திய இடத்தில் எருக்கம் செடியின் பாலை வைத்தால் இரண்டு நாளில் முள் முட்டிக்கொண்டு வெளியே வந்துவிடும். ஆனால் இந்த வேலிகாத்தான் வேதாளத்தின் முள் குத்தி விட்டால் முள் குத்திய இடத்தில் வீக்கம் ஏற்பட்டு நம்மைதுடிக்க வைக்கும் வலியைத் தரும் வலியைத் தரும். இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்ற நல்லவர்களுக்கும் நீதியரசர்களுக்கும் நமது நன்றி உரித்தாகுக.

அருமையான நடை நண்பரே.

அருமையான பதிவு நண்பரே.

நன்றி கவிஞரே. அரசியல் குறுக்கீடுகள் வருவதால் தான் அதிகாரிகள் கையறு நிலையை அடைகிறார்கள். அண்ணாவின் பெயரில் உள்ள கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் புறக்கணித்த கட்சி முதலில் அண்ணாவின் பெயரையே உச்சரிக்கத் தகுதியில்லாத கட்சி. இந்த லட்சணத்தில் தான் இந்நாள் முதல்வர் அம்மாவின் ஆட்சி தமிழின் பொற்கால ஆட்சி என்று கூறி பெருமிதம் அடைகிறார். அம்மா அவர்களிடம் பெயர் சூட்டவேண்டி கொடுக்கப்பட்ட குழந்தைகள் ஒரு குழந்தைக்குக் கூட தமிழ்ப் பெயரைச் சூட்டியதாக செய்திகளில் நான் பார்க்கவில்லை.. மொத்தத்தில் கூத்தாடிகளை அரசியலில் நுழையவிட்டு தமிழினத்தையே உலக மக்கள் கேவலமாக நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.

குற்றவாளிகள் திருந்தியதாக வரலாறு இல்லை.எண்ணம். போற்றத்தக்கது.

இது போன்ற காட்சி பல குடும்பங்களில் அரங்கேற்றம். பெற்றோரை மிதிப்பவர்களைத் தண்டிக்க அவர்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். கடந்த காலத்தில் நடந்த நல்லதை மறப்பவன் மனிதனே அல்ல.

நாட்டில் நிலவும் உண்மை நிலையை உணர வைக்கும் படைப்பு.

அருமையான எண்ண ஓட்டம். படித்த இளம் பெண்களில் பலர் சம உரிமை என்ற பெயரில் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக்கொள்கிறார்கள். இவர்கள் பாரதியின் ஆசையை நிராசையாக்கும் பெண்கள்.

நன்றி நண்பரே.

தா ங் க ள்

சொ ல் வ து

மு ற் றி லு ம்

உ ண் மை.

அருமை. நானும் ஒரு உழவரின் மகன் தான். 1960களிலேயே நாங்கள் பல இழப்புகளைச் சந்தித்துத்தான் எங்கள் நாலரை ஏக்கர் நிலத்தை 1968ல் விற்கும் நிலைக்கும் ஆளோனோம். கடன் சுமையே காரணம்.

ஏக்கம் தெளிவாகிறது. தொடர்க. வாழ்த்துகிறேன்.

காதலர் தினம் காமக் காதலர்களும், போலிக் காதலர்களும் பொது இடங்களில் வழக்கத்தை மிஞ்சும் வகையில் அநாகரிசமாக நடந்து காண்பவர் முகம் சுழித்து காறிக் காறித் துப்பும் தினம்

கொள்ளை அடித்து சொத்து சேர்க்க.


Malar1991 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com


புதிதாக இணைந்தவர்

Top Contributors of this Month

மேலே