எண்ணம்
(Eluthu Ennam)
படிகள் மறைந்தும் ஏறுகின்றேன்எங்கே செல்வேன் என்று தெரியாமலேயே... செல்லும்... (Sivajothi)
28-Jul-2022 9:43 am
படிகள் மறைந்தும் ஏறுகின்றேன்
எங்கே செல்வேன் என்று தெரியாமலேயே...
செல்லும் பாதையின் முடிவில் தடுமாறி நிற்பேனோ;
இல்லை
தலைவன் பதவியில் இருப்பேனோ என்று அறியாமல்..
இருண்ட மேகத்துக்குள்
பழத்தை பறிக்கச் சொன்னது போல் இவ்வாழ்க்கை..
கடலில் முத்தை எடுப்பது
போல் பல மடங்கு..
எட்டிப் பறிக்க என் கைகள் எட்டவில்லை என்றாலும்
நிச்சயம் அவ்விடத்தை அடைவேன் என்ற தன்னம்பிக்கை உள்ளது ..
அந்த படி இல்லா மேகத்துக்குள்
என் வாழ்க்கையை....
ஒரு மனிதனை வெட்டுவதும் அவனை கொலை செய்வதும்
பாவமான செயல்கள்
கோவில் திருவிழா வில் ஆடு
மாடு கோழிகளை தான்
பழி கொடுப்பார்கள் ஆனால்
காட்டில் தன் தனியாக
வேட்டையாடி கொண்டு இருக்கும்
சிங்கத்தை மட்டும் எதுவும்
செய்ய முடியாது என் என்றால்
அது தான் காட்டின் ராஜா
நீ ஆடு இல்லை சிங்கம்
பூத்துகுலுங்கினாலே பறித்துவிடுவார்கள் என்று பூக்கள் பூக்காமல் இருந்ததில்லை. !!அதுபோல... (Naatu)
12-Mar-2022 9:08 pm
பூத்துகுலுங்கினாலே
பறித்துவிடுவார்கள் என்று
பூக்கள் பூக்காமல் இருந்ததில்லை. !!
அதுபோல தான் வெற்றி என்ற கனியை
நாம் பறிக்காமல்.. !!
விடப்போவதுமில்லை... !!
[ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !‘குறிக்கோள், திட்டமிடல், துவக்குதல்,... (மசுகு)
24-Sep-2021 9:29 am
[ம.சு.கு]வின் :
வெற்றியாளர்களின் பாதை !
‘குறிக்கோள், திட்டமிடல்,
துவக்குதல், செயல்படுத்துதல்,
தொடர்தல், இலக்கை அடைதல்,
அடைந்தநிலையை தக்கவைத்தல்’
உலகின் யதார்த்தம்;
- வெற்றிபெற்றவர்கள் யாவரும் மாபெரும் அறிவாளிகளாகவோ, பேராற்றல் படைத்தவர்களாகவோ இருப்பதில்லை.
- பல வியாபார வெற்றியாளர்கள் பள்ளிக்கல்வியைக்கூட பூர்த்தி செய்யவில்லை.
- பல கண்டுபிடிப்பாளர்கள், கல்லூரிகளில் கால்வைத்ததுகூட கிடையாது.
அதேசமயம், படிக்காதவர்கள் எல்லோருமே வெற்றிபெற்று விடுவதில்லை. இதுவுமில்லை அதுவுமில்லை என்கிறபோது, பின் வெற்றிக்கான வழிதான் என்ன ? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்.
வெற்றிக்கான பதில் இன்னதென்று காலந்தொட்டு பல அறிஞர்கள் கூறிவருகின்றனர். பலரின் கருத்துக்களில் முயற்சி, பயிற்சி, அஞ்சாமை, சாமர்த்தியம் என்று எண்ணற்ற வழிமுறைகளை கேள்விப்பட்டிருக்கின்றோம். இவைகள் யாவற்றையும் பல வெற்றியாளர்களின் கதைகளோடு கேட்கும்போது மிகுந்த சுவாரஸ்யமானதாகவும், உத்வேகமுட்டுவதாகவும் இருக்கிறது. அதே சமயம் நம் குறிக்கோள் செயல்பாடு என்று வருகின்றபோது, இவைகள் யாவற்றையும் நம்மால் எதிர்கொண்டு செயல்படித்தி வெற்றிக்கான இயலுவதில்லை. அப்படி நமக்கும், வெற்றியாளர்களுக்கும் இடையே என்னதான் வித்தியாசமோ? என்று நாம் பல சமயம் சிந்தித்து குழம்புகின்றோம்.
வெற்றியும் - அதிர்ஷ்டமும்;
நம் ஊரில் மருத்துவர்கள் இருப்பார்கள். ஆனால் அவற்றில் ஒரு சிலர் மட்டுமே பிரசித்திபெற்று அதிகவருவாய் ஈட்டுகிறார்கள். கல்வியிலும், பயிற்சியிலும் சமமானவராயினும், ஒரு சிலரால் அந்த மேல்நிலையை அடைய முடிவதில்லை. இது மருத்துவத்துறையில் மட்டுமல்ல ! எல்லா துறைகளிலும் மேம்பட்ட அறிவுநிலை உடையவராயினும், சிலரால் அந்த வெற்றிநிலையை அடைய முடிவதில்லை (சட்டம், கலைகள்,....). வாழ்வின் யதார்த்தம் இவ்வாறு இருக்க, நம்மில் பலருக்கு வழக்கமாக எழும் கேள்வியும், அதற்கான சமாதானமும் பொதுவான ஒன்றே, ‘பெரிய வெற்றிகான ‘அதிர்ஷ்டம்’ வேண்டும்.
உண்மையில் ‘அதிர்ஷ்டம்’ வெற்றிக்கணியை தந்துவிடுமா ?
மேம்பட்ட கல்வியறிவு வெற்றியை உறுதிசெய்வதில்லை !நிரூபிக்கப்பட்ட திறமைகளும் வெற்றியை உறுதிசெய்வதில்லை !அதிர்ஷ்டமும் வெற்றியை உறுதிசெய்வதில்லை !
பின் வெற்றிக்கான வழிதான் என்ன? உண்மையில் சொன்னால், இந்த கேள்விக்கான நேரடி பதில் உலகில் எவரிடமும் இல்லை. எல்லா பதில்களும், விளக்கங்களும் பலரின் அனுபவம் சார்ந்த கருத்துக்களாகவே இருக்கின்றன.
வெற்றியும் – திறமையும்;
வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் எல்லா வெற்றியாளர்களும் திறமைசாலிகளாகவே உள்ளனர். ஆனால் இதன் எதிர்மறை வேறாக உள்ளது. எல்லா திறமைசாலிகளும் வெற்றியாளராக இல்லை ? ஏன் ?
சில சமயங்களில், திறமை குறைந்தவர்களுக்கு வெற்றி அதிர்ஷ்டத்தில் கிட்டிவிடுகிறது. அது ஒருமுறை ஏற்படும் எதேட்சையான நிகழ்வுதானே தவிர, மீண்டும் மீண்டும் தொடர்வதல்ல. இந்த அசாதாரன நிகழ்வுகளைக்கொண்டு நாம் அதிர்ஷ்டமற்றவர் என்று எண்ணி மனம் துவள்வதில் எந்த பயனுமில்லை. இப்படி வெற்றியின் சூத்திரம் மிகவும் குழப்புவதாக இருக்கின்ற நிலையில், வெற்றியை சுவைக்க எண்ணும் ஒவ்வொருவரும் வெற்றிப் படிநிலைகளை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இந்த படிநிலைகளை பல வெற்றியாளர்களின் வாழ்க்கை பயணத்தில் இருக்கும் பொது நிலைமையை அறிவதில் துவங்குகிறது.
சராசரியைவிட ஒரு படி மேலே !!
முதலாவதாக, எல்லா வெற்றியாளர்களும் பொதுவில் சராசரியர்களைவிட சற்றே கூடுதல் திறன் படைத்தவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு வெற்றியாளரும் அவருடைய துறையில் சராசரியானவர்களை விட குறைந்தது ஒரு சதவிகிதமேனும் அறிவும், திறமையும் கூடுதலானவர்களாகவே உள்ளனர். வெற்றிக்கு முதல்படி, நாம் தேர்வுசெய்யும் துறையில் சராசரியானவர்களைக் காட்டிலும் சற்றேனும் முன்னிருக்க வேண்டும். அதாவது கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் அவசியமாகிறது.
கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் !!
நான் மருத்துவத்துறையில் வெற்றிபெற குறைந்தபட்சம் முதலில் ஒரு மருத்துவராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவ அறிவைக்கொண்டு, நான் அலோபதி மருத்துவத்துறையில் கோலோச்ச விரும்புவது முற்றிலும் அர்த்தமற்றது. அடிப்படை கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் வெற்றிக்கு முதல்படியாகிறது. குறைந்தபட்ச உடல் தகுதியில்லாமல் விளையாட்டில் சாதிக்க இயலாது.
இந்த கதவுநிலை தகுதியை கடந்தவர்கள் மட்டுமே வெற்றுயை தோக்கிய ஓட்டப்போட்டியின் தகுதிச்சுற்றிற்கு நுழைய முடிகிறது. இந்தநிலை வெறும் நழைவுச்சீட்டு மட்டுமே. வெற்றியின் உறுதிச்சான்றிதழ் அல்ல. இந்த தகுதிநிலையோடு நம்முன்னே நூறுபேர் நிற்பார்கள். இங்குதான் வெற்றியாளர்களுக்கும் ஏனையவர்களுக்குமான வேறுபாடு துவங்குகிறது.
விலகுபவர்கள் மத்தியில் தொடர்வது !
‘வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செய்வதைக் காட்டிலும், சாதாரண செயல்களையே வேறுபட்ட விதத்தில் செய்து வெற்றிகொள்கிறார்கள்.’
- மற்றவர்கள் சோர்ந்து ஓய்வெடுக்கும் நேரத்தில், இவர்கள் தொடர்ந்து உழைக்கிறார்கள் !!
- நாம் போகும் பாதை சரியா ? தவறா ? என்று சிலர் குழம்பியிருக்கும் தருணத்தில், இவர்கள் குழப்பமின்றி உழைக்கிறார்கள் !!
- சிறு, சிறு தோல்வி கண்டு அஞ்சி விலகிபவர்கள் மத்தியில் இவர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள் !!
எல்லா வெற்றியாளர்களின் இரண்டாவது பொதுநிலை இதுதான். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் தளர்ந்து ஒதுங்குகின்றபோது, இவர்கள் தங்களது முயற்சியையும், தன்னம்பிக்கையையும் தளரவிடாமல் தொடர்ந்து வெற்றியிலக்கை அடைகிறார்கள்.
தொடர் பயிற்சி வெற்றியை உறுதியாக்குமா ?
இப்படி இடைவிடாது தொடர்பவர்கள் எல்லோரும் வெற்றியை சுவைக்கின்றனரா ? என்று கேட்டால், கட்டாயம் வெற்றிபெறுகிறார்கள். இப்படி தொடர்ந்து பயிற்சித்துத்தான் இலட்சத்தில் ஒருத்தர் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறுகிறார். தொடர்ந்த பயிற்சி, மாநிலம் மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றியை கொடுத்து ஒலிம்பிக்வரை அனுப்புகிறது. இப்படி கடுமையான பயிற்சியுடன் எல்லா நாட்டிலிருந்தும் எண்ணற்ற வீரர்கள் வருகின்றனர். எல்லோரிடைய கணவும் தங்க பதக்கம் வென்று தங்கள் நாட்டு தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்ய வேண்டுமென்பதே. எல்லாருமே கடுமையான பயிற்சி பெற்றவர்களாயிருந்தாலும் இறுதியில் ஒருவர் தான் வெற்றி பெறுகிறார். ஏன் அந்த இறுதி வெற்றிக்கணி மற்றவர்களுக்கு கிட்டுவதில்லை? அந்த இறுதி வெற்றிபெற்ற ஒருவர் அப்படி என்ன தனிபட்ட திறன் பெற்றள்ளார்?
தினமும் 1% ஆற்றலை மேம்படுத்துதல் !
வரலாற்றைப் பாருங்கள். நீச்சல் போட்டியில் தொடர்ந்து ஒருவரே தங்கங்களை வென்றுகுவிக்கிறார். தொடர்ந்து இரண்டு-மூன்று ஒலிம்பிக்குகளிலும் அவர் வெற்றிகொள்கிறார். இதை பல தடகள போட்டிகளில் தொடர்ந்து காண முடிகிறது. அந்த தனிப்பட்ட ஒரு நபரின் வெற்றியின் இரகசியம்தான் என்னவோ ? இந்த வெற்றியாளரிடம் தான் வெற்றியின் கடைசி சூத்திரம் உள்ளது. ஆம்! தொடர்த்து பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு சதவிகிதமேனும் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். எவனொருவன் அன்றாடப் பயிற்ச்சியில் தொடர்ந்து சிறு சிறு முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறானோ, அவனே போட்டிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடிகிறது.
ஆம் ! எல்லோரும் பிறக்கும் போதே பெறும் ஆற்றலுடன் பிறப்பதில்லை. அன்றாடம் நம் ஆற்றல்களை தொடர் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருமுறை பயிற்சி செய்யும்போதும், நமது இலக்கு நேற்றைய பயிற்சியைவிட 1% மேம்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சிறிய 1% மேம்பாடு, நாளடைவில் நமது திறனை பண்மடங்காக உயர்த்தியிருக்கும். நாம் ஒரு வருடத்தில் நமது திறனை குறைந்தபட்சம் 37 மடங்கு அதிகரித்திருக்கும்.
வெற்றிக்கான பாதை;
வெற்றிக்கான வழிமுறைகள் இன்னதென்று இலக்கணத்தை நம்முன்னோர் வகுத்து வைக்காவிடினும், பலரின் அன்பவங்கள் நம்மை அந்த பாதையை நோக்கி வழிநடத்தும். பல வெற்றியாளர்களிடம் பொதுவாக கண்ட வெற்றிபாதையின் படிகளானவை ;
- சராசரியைவிட ஒரு படி மேலே இருத்தல் !
- கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் !
- விலகுபவர்கள் மத்தியில் தொடர்வது !
- தினமும் 1% ஆற்றல் மேம்பாடு !
இவை நான்கும் வேதமொழிகள் அல்ல. அனுபவரீதியிலான வெற்றியாளர்களின் பொதுவுடைமைகள்.
இதை நாம் நமது வாழ்வில் எவ்வாறு செயல்படுத்தி வெற்றிகொள்கிறோம் என்பதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியுள்ளது.
- ம.சு.கு (www.palakkavalakkam.com) (palakkavalakkam@gmail.com)
முயற்சிமுயன்று பழகிடு முயல்வது முதற்படி மிக உயரமான படிக்களுக்கும்... (கவிஞர் விக்னேஷ் சுரேஷ்குமார்)
30-Mar-2019 12:00 am
முயற்சி
முயன்று பழகிடு
முயல்வது முதற்படி
மிக உயரமான படிக்களுக்கும்
முதற்படியே மூலம்
முன்னேற துடிக்கும் நீ
ஏன் முயல மறுக்கிறாய் ?
இறுதி படியில் நின்று சிரிக்க நினைக்கும் நீ
ஏன் முதற்படி ஏற அழுகிறாய் ?
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..?? கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில்... (அருண் குமார்)
01-Sep-2018 6:30 pm
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..??
கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில் ஈடுபடுங்கள்"...
அங்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும்"....
நமக்கு நாமே கூறிக்கொள்ளும் ஆறுதலே வலிமையானது"...!
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..?? கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில்... (அருண் குமார்)
01-Sep-2018 6:27 pm
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..??
கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில் ஈடுபடுங்கள்"...
அங்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும்"....
நமக்கு நாமே கூறிக்கொள்ளும் ஆறுதலே வலிமையானது"...!
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை.. சிறிது காலத்தில் இறந்தும் போனார்..பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது..அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது...ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....
உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...
மாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி...பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...
ஆம் நட்பே.. 22-Jul-2018 11:11 am
நல்ல சிந்தனை
22-Jul-2018 10:46 am
எல்லோரும் உயரலாம்,எல்லாம் என்னால் என,எண்ணாமலிருந்தால்....!-நா.சதீஸ்குமார்... (நா சதீஸ்குமார்)
04-Dec-2016 5:30 pm
எல்லோரும் உயரலாம்,
எல்லாம் என்னால் என,
எண்ணாமலிருந்தால்....!
-நா.சதீஸ்குமார்
மேலும்...