எண்ணம்
(Eluthu Ennam)
காதல் செய்த தவறோ
காலம் செய்த தவறோ
காதலி உன்னோடு சேர முடியாமல்
காதல் மீதுள்ள நம்பிக்கையால் மட்டும்
காத்திருக்கிறேன்,நீ மீண்டும் வரமட்டாயா என காலம் முழுவதும்....
வேண்டும் நீ
பிரிவால் என்னை பைத்தியம் ஆக்க... வேண்டும் நீ
கோவத்தால் என்னை கொல்ல..
வேண்டும் நீ
வார்த்தைகளால் என்னை வதைக்க...
வேண்டும் நீ
வெறுப்பால் என்னை வேதனை படுத்த...
வேண்டும் நீ
பரிவால் பிரிவு துயர் துடைக்க...
வேண்டும் நீ
அன்பால் என்னை அரவணைக்க...
வேண்டும் நீ
காதலால் என்னை கட்டி போட...
வேண்டும் நீ
முத்ததால் முகம் நனைக்க...
வேண்டும் நீ
உயிர் வேண்டுவதற்காக...
தொலைவில் கூட உன்னை
தொலைத்து விட கூடாதென்று எண்ணினேன் - ஆனால்
தொடு துரத்தில் இருந்தே
தொலைந்து விட்டாய் !
கண்ணுக்குள் வைத்த உன்னை
காணாமல் தவிக்கிறேன் !
காதலில் தோற்றது போல
உணர்கிறேன் !
அதிகார செய்யலிலே அணைத்தையும் இழந்து;
ஆணவ பேச்சிலே அன்பையும் தொலைத்து;
காதலின் சாரலை காற்றிலே கரைத்து;
உண்மையான பாசத்தை உடைதெறிந்தேனே........
வெக்கத்தில் குனிந்தேன்
உன் முகம் பார்க்க,
துக்கத்தில் வருதினேன்
என் முகம் பார்க்க,
இனி எங்கு காண்பேன்
நான் கண்ட காதலை......!
நிலவில்லா வானமாய்...மணமில்லா மல்லியாய்...ஸ்வரமில்லா ராகமாய்...நீயின்றி நான்....! என்னவளே....வசந்தமாய் வந்து....,வாழ்வில்... (renu)
29-Feb-2020 8:05 pm
நிலவில்லா வானமாய்...
மணமில்லா மல்லியாய்...
ஸ்வரமில்லா ராகமாய்...
நீயின்றி நான்....!
என்னவளே....
வசந்தமாய் வந்து....,
வாழ்வில் வெளிச்சம் தருவாயா....!
அவளில்லா அந்திப்பொழுது...நஞ்சுண்ட நெஞ்சமது.....வெஞ்சுரத்தால் வெந்தது போல்...!அழுந்து பட்ட விழுப்புண்... (renu)
27-Feb-2020 6:18 pm
அவளில்லா அந்திப்பொழுது...
நஞ்சுண்ட நெஞ்சமது.....
வெஞ்சுரத்தால் வெந்தது போல்...!
அழுந்து பட்ட விழுப்புண் மேல்..,
எறிந்து விட்டு வேல் பாய்வது போல்...!
நீ உதிர்த்த ஒற்றைச்சொல்...,
நெஞ்சை புண்ணாக்கியது பெண்ணே...!
பித்திகை சூடிய பெண்மையே. ..!
கொடிதினும் கொடிது...,
இளமையில் வறுமையாம்....!
ஆனால்...,
அதனினும் கொடிது...,
நீயில்லாத்தனிமையடி....!
மல்லிகை மலர் சூடி...,
அல்லிதழ் நடையோடு...,
நடந்து வரும் பூமகளின்..,
சொல்லில் தேன் தொடுத்த-
மெல்லிதழ் ஓசைகூட...,
வில்லில் வரும் அம்பாய்....,
என் விழி தைத்துப்போனதடி.!ம ஞ்சள் நிற ஆதவன் ஒளி..!
நெஞ்சில் பட்டு அழுத்துதடி....!
நீயில்லாத நேரந்தனில்....!
பிரிந்தாலும் உன் நினைவுகள் சுகம் தான்
ஆனால் அந்த சுகம் தரும் ரணம் தான் தாங்கிக்கொள்ள முடியாதது "
காதலிக்க சாதி வேண்டுமோ?ஒன்று சேர மதம் வேண்டுமோ?காலமெல்லாம் தனிமையில்... (K SUNDARRAMAN)
23-May-2019 11:32 am