உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே ..(பொங்கல் கவிதைப்போட்டி )
நல்லநாள் பார்த்து விதை விதைத்து
நன்றாய் வளர நால்வித உரம்போட்டு
நம்மக்கள் சாப்பிட வளர்த்த நாற்று
நல்லநேரம் பார்த்து நடவு செய்து
நஞ்சு சேராமல் பிஞ்சு போல பார்த்து
நசுங்காம பிசுங்காம பக்குவமா பிரித்து
நல்ல தண்ணீர் பாய்ச்ச வரப்புவெட்டி
நாளுக்கு நாள் வளர விட்டு
மூன்று திங்களாய் முளைவிட்ட பயிரை
பால்மணம் மாறி முற்றின பயிரை
நெற்றிப்பொட்டு அளவில் வந்த நெல்மணியை
நேரம் பாராமல் கதிர் அறுத்து
இந்தியநாட்டை மார்த்தட்ட வைத்த விவசாயி
இந்தியநாட்டின்முதுகெலும்பாய் இருந்தவிவசாயம்
விளிம்பில் நிற்கும் விலைப்பொருளாம்
வருங்காலத்தில் கண்காட்சியில்கலைப்பொருளாம்
காலம்காலமாக கற்புகொண்டு வளர்ந்த உழவு
தினம்தினம் செத்துக்கொண்டு இருப்பது இழிவு
கரிசல் மண்ணில் பொன்கொழித்த விவசாயம்
தரிசாய் போனதே இது அநியாயம்
மனம் மகிழ்ந்து விதைத்தானே அன்று
மகிழ்ச்சி மறந்து இறக்கிறானே இன்று
இறப்பது அவர்களல்ல நம்நாட்டு உழவு
விவசாயம் விளிம்பில் விவசாயி தகனஅடுப்பில்...