ஞாயிற்று கிழமை

சென்னை புறநகர் பேருந்து நிறுத்தம்

வாழ்கையை தேடி படை எடுக்கும் கூட்டமும் உறவுகளின் முகம் தேடியும், தான் உயிருடன் இருக்கும் செய்தியை ஒரு முறை தன் சொந்த ஊரில் பதிவு செய்யவும், ஊர் திரும்பும் கூட்டமும் சந்தித்து கொள்ளும் மைய புள்ளி

அரசு விரைவு பேருந்தில் கன்னியாகுமரி வரை பயணமாகும் இவன் பெயர் சந்தோஷ்

எத்தனையோ துயரங்களையும் வேதனைகளையும் தினம் தினம் பார்த்து பார்த்து அலுத்து போனதால் இனி எவருடைய துன்பத்தையும் சந்தோஷத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு டீசல் கிடைத்தால் போதும் என்று தீர்க்க முடிவோடு பயணத்தை தொடர்ந்தது அரசு பேருந்து

ஜென்னலோரம் அமர்ந்து விழியை மட்டும் வெளியே வாடைகைக்கு விட்டு பயணமாகும் சந்தோஷின் மனதில் சில நினைவுகள்

சில வருடங்களுக்கு முன்பு

உனக்கு அம்மா பிடிக்குமா இல்லை அப்பா பிடிக்குமா என்ற கேள்விக்கு எனக்கு பாட்டி தான் பிடிக்கும் என்று சொன்னதை கேட்டதும் அப்படியே தன்னை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அதையும் தாண்டி ஆறு வயது சிறுவனான தன் காலில் விழுந்து பாதத்திற்கு முத்தமிட்ட பாட்டியின் நினைவு . . .

தனக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் கோவில் கோவிலாய் சென்று அடி பிரதஷ்ணம், அங்க பிரதஷ்ணம் என்று செய்து வந்த பாட்டியின் அன்பு . . .

தான் பள்ளி படிப்பை முடித்ததும் வெளியூரில் எத்தனையோ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் ஒருவாரம் உண்ணாவிரதம் இருந்து சொந்த ஊரிலே சேர செய்த பாட்டியின் பிடிவாதம் என சில நினைவுகள் மனதில் அலை அடித்து அலை அடித்து சில கண்ணீர் துளிகளை வெளியேற்றி கொண்டே இருந்தன

சில மதங்களுக்கு முன்பு

கல்லூரி முடிந்து சென்னையில் ஒரு மேலைநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து சென்னைக்கு புறப்படும் தருணம்

யாண்டா கோதண்டம் நீ சம்பாரிச்சு சேர்த்ததெல்லாம் போதாதா என்ன பேரன் சம்பாதிச்சி தான் நாம சாப்பிடனுமா? அப்படியே வேலைக்கு அனுப்பினாலும் உள்ளூர்ல இல்லாத வேலையா?
என் பேருல இருக்க எல்லா சொத்தும் என்ன பேரனுக்கு தானே அதுபோதுண்டா அவனுக்கு இந்த பச்சபுள்ள சம்பாதிக்கணும்னு இப்ப என்ன அவசியம் வந்துச்சு?

"இப்படியே செல்லம் கொடுத்து கொடுத்து சந்தோஷ உருபடதவனா ஓதவகறையா மாத்தியாச்சு இப்ப அந்த பெருமாளே வழி விடும் பொழுது இப்ப அதையும் கெடுத்துக்கிட்டு வயசாயிடுசினா ஒரு மூலையில கிடக்க வேண்டியதுதானே" என்ற மருமகள் அலமேலுவை பார்த்து

ஏய் அலமு நானாச்சு என் புல்லையாச்சு நீ உன் வேலைய மட்டும் பாரு என்று திட்டிகொண்டே

சந்தோஷ் உன் மனசு கூட கல்லா போயிடுச்சாடா பெரிய வேலை வந்ததும் பாட்டி கண்ணுக்கு தெரியாம போயிடுச்சா உன்ன விட்டு நான் எப்படி இருப்பேன் என்னை விட்டு போகதப்பா இன்னும் ஆறு மாசமோ ஒரு வருசமோ நான் செதததும் என்னை எடுத்து போட்டுட்டு எங்க வேணா போய்க்கோடா என்று அழுது ஆர்பாட்டம் பண்ணிய பாட்டியின் நினைவு

ஒருவழியாக சென்னையில் வேலைக்கு சேர்ந்த பின்பு அடிக்கடி பாட்டி போன் செய்யும் பொழுது வர்ற ஞாயிற்று கிழமை வருகிறேன் என்று சொல்வதோடு மட்டும் சரி, வேலையின் சுமை காரணமாகவும் அதிகாரிகளின் நிர்பந்தத்தின் காரணமாகவும் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலையில் இன்று மட்டுமே பாட்டியை பார்க்க சந்தோஷ் ஊருக்கு சென்று கொண்டிருக்கிறான்

ஆனால் இன்று ஞாயிற்று கிழமை அல்ல புதன் கிழமை இன்று போகவிட்டால் இனி எப்பொழுதுமே அவனின் பாட்டியை பார்க்க முடியாது காரணம் அவன் பாட்டி இறந்து நான்கு மணி நேரம் ஆகிறது

எல்லா இறுதி சடங்கும் முடிந்து பாட்டியின் அறையை சுத்தம் செய்கையில் சுவரில் மாட்ட பட்டிருந்த மாத நாட்காட்டியில் பல ஞாயிற்று கிழமைகள் கரியால் தீட்ட பட்டதை பார்த்ததும் சந்தோஷின் கண்களில் அவ்வளவு துயரம், காரணம் எந்த ஞாயிற்று கிழமைகள் எல்லாம் கரிபூச பட்டிருந்ததோ அது அதனையும் சந்தோஷ் பாட்டியை பார்க்க வருவதாய் சொன்ன நாட்கள்

"இந்த கிழவி அப்படி என்னதான் நினைச்சிருபாலோ எதாவது எழுத படிக்க தெரிஞ்சாலும் பரவாயில்லை அப்படி என்னதான் இருக்கிறதோ அந்த ஞாயிற்று கிழமையில்"
என்று புலம்பிய அம்மாவின் குரல் இன்னும் அழுகையை அதிகரித்தது சந்தோஷ்க்கு

இனி ஆயிரம் ஞாயிற்று கிழமைகள் வரும்

ஆனால்

சந்தோஷின் வருகைக்காக ஏக்கத்துடனும் பாசத்துடனும் காத்திருந்த பாட்டியின்

ஞாயிற்று கிழமை ?

எழுதியவர் : சத்யா (15-Jan-13, 10:45 pm)
பார்வை : 360

மேலே