பெண்...
பொறுப்புகள் போதும் படிப்பெதற்கு என்றார் அன்று...
பொறியியல் படிக்க வந்தோம் இன்று...
கட்டுப்பாடுகள் மட்டுமே உனக்கு என்றார்...
கட்டிடம் கட்டவந்தோம் இன்று...
வாழ்வில் கல்லும் முள்ளும் கடந்துவந்த பெண்ணால்
இவற்றை தாங்க இயலாதா...??
வாய்ப்பேச்சில் வல்லோரே கேளுங்கள்....
வானம் வசப்படத்தான் போகிறது...
நாங்கள் தீட்டப்போகும்....
கட்டிடம் எனும் சித்திரங்களால்....