ஒரே தாவில் உச்சம்

தொலை தூரம் நின்று பார்க்க
மலைகளெல்லாம் தெரியும்...
அடிவாரம் சென்று நிற்க
மலை மட்டும் தெரியும்..

ஒரே தாவில் உச்சம் செல்ல
எண்ணம் வந்து நின்று போகும் .
ஆனால் படிக்குப்படி சிறியஅடி
எடுத்து வைத்தால்
உண்மை சிறுகப் புரியும்.

உச்சிவரை போவதுதான்
இலக்கு எனில்
எடுத்து வைக்கும் அடிகள்
ஒவொன்றாய் விரியும்.

தேர்ந்து தெரிந்து
நிலைநின்றால் தெளிவாய்
உண்மை புரியும்.

இயற்கை மடியில்
கோடி இன்பம் கொட்டிக்
கிடக்கும் விந்தை அதைத்
தேவை கொண்டும்
தேடிச் சென்றும்அளவுடனே
துய்திடல் வேண்டும் .

அதற்கு தெளிவு அறிவு
பொறுமையுடன் செயலது
கொள்ளல் வேண்டும்.
மேற்கொள்ள வேண்டும் .

எழுதியவர் : Minkavi (18-Jan-13, 2:07 pm)
பார்வை : 173

மேலே