இவனே என் காதலன்.....

உன் முகம் பார்த்தாலே
பார்வைகள் இனித்திடுதே
உன் பக்கம் வரவே
உன்னோடு சேர்ந்திங்கு வாழவே
உயிர் நிதம் வேண்டிடிதுதே...

நமக்குள் ஒளிவு மறைவு
என்பதில்லை...
நீயின்றி என் எண்ணத்தின்
பிரதிபலிப்பு இங்கில்லை...
என்னுள் பாதியாய்
என் முன்னே
என்றும் நீயே இருக்கின்றாய்...

விடிய விடிய விழிமூடாமல்
உன்னோடு நான்
என்னோடு நீ....
இன்று நாம் விடும் மூச்சு
நாளை ஊரெல்லாம் பேச்சு

என்னை செம்மைபடுத்தி
சிந்திக்கவைக்கின்றாய்....
சிரித்தும் சிரிப்பூட்டியும்
மயங்க வைக்கின்றாய்....

காதலை காதலித்து
கவிதை எழுத வந்தேன்
இன்று நீயே
எனக்கொரு காதலானாய் மாறி
என்னை மாற்றி
நிதம் உன் அன்பினால்
அழகான எழுத்தினால்
அனுதினமும்
அரவணைத்துசெல்கின்றாய்...

உனக்கு தந்தது ஓர் முத்தமே
நீ தந்தது ஓராயிரம் முத்தமே
இனி நமக்கில்லை ஓர் துன்பமே
புதியதோர் விதி செய்வோமே
கவலை இன்றி களிப்புடன்,
வாழ்வோம் பல்லாயிரம் வருடமே...

உன்னோடு இருக்கும் நொடிகளில்
உரையாடும் நிமிடங்களில்
உணர்ந்தேன் ஓர் ஆத்ம திருப்தி
இது வரை கண்டிடாத
உணர்வுகளின், உயிரின் ஓசையை
உணர்ந்த நீயே என் காதலன்
இவனே என் காதலன்....

-PRIYA

எழுதியவர் : PRIYA (25-Jan-13, 3:31 am)
பார்வை : 169

மேலே