காதலில்...
காதலிலும்.....
தீண்டாமை.....
ஒரு பாவச் செயல்....
படித்ததில்லையா?...பெண்ணே!
*********************************************
புற்களை மிதிக்காதீர்கள்....
எச்சரிக்கை வாசகம் கண்டு ...
வாடித் தவிக்கிறது புல்...
உன் பாதம் பார்த்தபடி.
*********************************************
உன் ஒற்றைப் பார்வையில்...
அடிபடும் பறையென அதிர்கிறது உடல்.
புன்னகையிலோ...
கலவரப் பூமியாய் பதற்றமாகிறது.
பூ என யார் எழுதியது உன்னை?
பூகம்பம் சுமந்து வருகிறாய்....நீ.
அணுக்களாய்ச் சிதறுகிறேன்...
அடைபடாமல் அலைகிறேன்...
நான் மட்டும் திரியும் வெளியெங்கும்.
*****************************************************************
என் கனவுகள்...உன்னால் ஆனவை.
என் இரவுகளும்..
நிலவு திருடிய ஒளியாய்...
வெளிச்சம் இழக்கிறது என் உடல்.
தவிர்க்க இயலாமல்...
எனக்கு இரவாகும் பொழுதுகளில் எல்லாம்...
நீயாகிக் கொண்டிருக்கிறேன் நான்.
******************************************************************
அலையாகி விட்டது மனம்.
கரை எது எனத் தெரியாமல் புரளுகிறது.
வழி மீறி...வெளியேறுகையில்...
தயவு செய்து அனுப்பிவை...
உன் விழிப் படகை.
அமர்ந்து...ஆசுவாசம் கொள்ளும்...
என் காதல்.
**********************************************************************