வேண்டும்!வேண்டும்!

பூமியில் பிறவி வேண்டும்.
.பிறவியில் மனிதம் வேண்டும்..
மனிதனில் மனம் வேண்டும்.
மனத்தினில் அன்பு வேண்டும்.

அன்புக்கு க்கருணை வேண்டும்.
கருணைக்கு இரங்க வேண்டும்.
இரங்கிட அருள் வேண்டும்.
அருளிட த் தூய்மை வேண்டும்.

தூய்மைக்கு பக்தி வேண்டும்.
பக்திக்கு இறைஞ்ச வேண்டும்.
இறைஞ்சிட மெய்மை வேண்டும்.
மெயமையே துலங்க வேண்டும்.

துலங்கிடத் தியானம் வேண்டும்.
தியானிக்கச் சிந்தை வேண்டும்.
சிந்தைக்குள் அமைதி வேண்டும்.
அமைதிக்குத் தீர்க்கம் வேண்டும்.

தீர்க்கம்பெற ஞானம் வேண்டும்.
ஞானம்பெற யோகம் வேண்டும்.
யோகம்பெற பயிற்சி வேண்டும்.
பயிற்சிக்குப் பழக வேண்டும்.

பழகிடத் துணிய வேண்டும்..
துணிந்திட உறுதி வேண்டும்.
உறுதிக்கு உரம்வேண்டும்.
உரம் பெற நம்பவேண்டும்.

நம்ப ஒரு மாரக்கம் வேண்டும்.
மார்க்கம் அதைத் தேடவண்டும்.
மார்க்கம் சேரமூலம் வேண்டும்.
மூலமே பற்ற வேண்டும்.

பற்றிட உறுதி வேண்டும்
உறுதியாய்த் தேட வேண்டும்.
தேடத்தேட கிடைக்குமே
தெய்வத்தின் தரிசனம்.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (25-Jan-13, 10:51 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 108

மேலே