கடவுள் கடவுளாகிப்போனார் - 5

[color=brown]கடவுள் – 5

பிணம் எரிக்கக்கூட
கான்கிரெட் கூரையாக்கிவிட்ட சூழலில்
கிராமத்தின் ஓட்டைக் குடிசையில்
கடவுள் நிம்மதியாக உறங்கி எழுந்தார்!
சாலை சரியில்லை
கேபிள் டீவி இல்லை
இன்டர்நெட் இணைப்பு இல்லையென்று
நகரத்துக்குப் போக முடிவைடுத்து
நகரத்தில்
வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார்!
பவர் கட்டால்
கடவுளின் உடல்
வியர்வையால் விழிப்புற்றே இருந்து எழுந்தார்!
சமையல் செய்யலாமென
ஆரம்பிக்கும்போது இருந்த மின்சாரம்
சட்னி அரைக்கும்போது கட்டாகியிருந்தது.
வெறும் இட்லி சாப்பிட்ட
கடவுளுக்கு ஞாநோதயம் வந்தது!
வரும்போது
உலக்கை, அம்மி, ஆட்டுக்கல்லை மறந்தது.
[/color]

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (1-Feb-13, 2:26 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 126

மேலே