புலம்பும் டி.வி. ரிமோட்
கைக்குழந்தைஎன்றானேன்கரம்மாறும் ரிமோட்நானே
ரிப்பேர் வந்ததால் குப்பையில் போனேன்
குரங்கின் கை பூமாலை என்றே ஆனேன்
விடுமுறை வந்ததால் உங்களுக்கு ஓய்வு
என்றும் எனக்கு உங்கள் கையில் தொய்வு
பாட்டரி வீக் என்றே வீணாகிப்போனேன்
பொட்டென்றுதட்ட புனர் ஜென்மம் பெற்றேன்
தொல்லை தந்ததால் உங்கள்கையில் தொலைந்து போனேன்
ஒருபோர்ப் படை என்றே வந்தீரே என்னைத்தேடி
கண்ணில் பட்டேன் கரத்தால் அழுத்தித்தட்டித் தேய்க்க
எடுப்பார் கைப்பிள்ளை நானே இந்த -மனிதரை
எதிர்க்க எனக்கு ஓரு வாய்ப்பில்லை தானே