மறந்து விட்ட மணாளனுக்கு.....

என் கண் இமைகளில்
தாங்க முடியாத சுமை!

உறக்கத்தை இரக்கமின்றி
பறித்துக் கொண்டன
உன் நினைவுகள்!

கடற்கரை மணலில்
உன்னோடு கைகோர்த்து சென்ற
என் கைவிரல்களின் சுகம்.....

என் தலைப்பின்னலுக்காய்
பேரம் பேசி வாங்கித் தந்த
குண்டு மல்லியின் வாசம்....

காதலோடு உன் விழிகளும்
காற்றோடு என் கூந்தலும்
பேசிக் கொண்டதை கவனிக்காமல்
உன் கன்னங்களை
கவனித்த என் செவ்விதழ்கள்...

நம் உறவுகளின் போது
பலநேரம் கலப்பினமாகியிருக்கின்ற
தலைப் பேன்கள் பொடுகுகள்....

தெய்வ தரிசனங்களில்
கணவன் மனைவியாய்
நடத்தியிருக்கும் நாடகங்கள்....

எல்லா நினைவுகளும்
எனக்கு மட்டும் தானா?

நடந்ததை மறந்து கொள்
நடக்க இருப்பதை பழகிட
மனதை திறந்து கொள்!

சம்பிரதாயமாய் சொல்லிவிட்டு
திருமண சடங்குகளில்
யாரோடு வேண்டுமானாலும்
உன்னால் மட்டும்
எப்படி அமர முடிகிறது?

உலகமே எதிர்த்தாலும்
உன் உயிரானவன்
நான் ஒருவனே என
சொன்னதை மறந்துவிட்டு!!

எழுதியவர் : க.கார்த்தீசன் (6-Feb-13, 2:00 pm)
பார்வை : 195

மேலே