மதம் களைவோம்
மலிந்த மதத்துள்
மனிதத்தை புதைத்தே
மாண்புற வாழ்க்கை
இதுவே மானிடர் சேர்க்கை..!
இறை என்ற கணையில்
இரக்கத்தை மாய்த்தே
வெறிகொண்ட நெஞ்சில்
வஞ்சங்கள் சேர்ப்பார்..!
பழியோடு பாவம்
செய்தே உயிர்கொண்டு
திருநாமம் உரைத்தே
பாசாங்கு செய்திடுவார்..!
அன்பாளன் தன் இறை என்றும்
அகிலமே அவனென்றும்
அஞ்ஞானம் தன்னை
அவரவர் உரைத்திடுவார்..!
பரிகாசப்பேச்சில்
பண்பினை இழந்து
புரிந்துணர்வு தொலைய
புறம்பேசித் திரிவார்..!
பகுத்தறிவு கொண்டு
பல வாதம் புரிந்தும்
மதம் என்று வந்தால்
மடமையில் மூழ்கிடுவார்..!
மதம் ஒன்று எதற்கு
மதிகொண்டு அறியார்
மதம் கொண்ட வேழமாய்
மண்ணுலகில் அலைவார்..!
தன்னிறை பெரிதென்று
தன்னிலை மறந்திங்கு
தறிகெட்டு பேசுவோர்
தரங்கெட்ட மானிடராம்..!
உடல் கொண்ட உயிரின்
உன்னதம் மறந்து
மதம் போற்றி வாழ்தல்
சாக்கடை குணமாம்..!
மதம் கொண்ட மனிதா!
மதம் களைந்தே எழுடா!
மனம் கொல்லும் மதத்தை
மண்ணுலகில் ஒழிடா..!