புதிர்

தனிமையின் நிமிடங்கள் சுகமானது
பயம் என்பது இல்லாதவரை...!
அதே நிமிடங்கள் சுமையானது
பயமின்மை விலகியதால்...!


ஏமாற்றங்கள் வாழ்வை பலவீனப்படுத்துகிறது
ஏமாறுவதே வாடிக்கையாகின்றது.....!
இந்த வாடிக்கை என்று பலவீனமாக்கப்படுகிறதோ
அன்று தான் மனித வாழ்வு பலமாகும்...!


நினைத்த காரியங்கள் நடக்காத சமயம்
வாழ்வு வெறுப்பாகலாம்.......அந்த
வெறுப்புகளை விருப்பமாக மாற்றி
வாழ்வதே வாழ்வின் நியதி....!


மனசாட்சியின் புரிதல்கள் சில
மனித சாட்சிகளுக்கு புரிவதில்லை....!
புரிவதாலோ நடிப்பதாலோ மனசாட்சிக்கு
பாரம் என்பது இல்லை.....!
மனிதத்தை நம்புவதை விட
மனசாட்சியை நம்புவது புனிதம்!


நட்பென்ற கவிதையில் வரிகளாவதற்கு
இன்று நடிப்புதான் முந்துகிறது...!
அதில் உண்மையான வரிகளாகியிருப்பது
நடிப்பில்லாத புரிதல்களின் மனசாட்சிகள்....!
கானல்நீரை கூட கண்டுபிடித்துவிடலாம்-அதன்
சுவடுகளைக் கொண்ட மனிதர்கள் கூட்டத்தை
கணக்கிடுவது மிகவும் கடினம்........!


நண்பர்கள் என்ற வேடத்தைக் கொண்ட
மனிதர்கள் மிகையாகும் தருணத்தில்
தூய மனங்களைக் கண்டறிவது கடினம்தான்.....!
கடினங்களைக் கடிந்து எளிமையாக்குவது மற்றொரு தூய மனதால் மட்டுமே முடியும்....!


இலைகள் என்பவை மரங்களை அழகுப்படுத்தும்
பசுமை நிற மலர்கள் - அதில்
பழுப்பு என்பது கலக்காதவரை
மரங்களின் அழகு ஒளிரும்....!
நட்பென்பதும் மரத்தைப் போலத்தான்...!
தூய உள்ளமென்ற இலைகளால் அழகுறும்-அதில்
வஞ்சம் கலந்தால் தூய இலைகள்
அனைத்தும் தூக்கில் தொங்கும்..!


மனசாட்சி,புரித்ல்கள்,புனிதமான நட்புகள்
உள்ள வாழ்வு மட்டுமே சிறக்கும்....!
தனிமை என்ற பயத்தை அறுக்கும்..!
ஏமாற்றங்களைத் துடைக்கும்.....!
வெறுப்புகளை விருப்பமாக்கும்......!

எழுதியவர் : sanmiya (5-Mar-13, 9:32 pm)
சேர்த்தது : sanmiya
பார்வை : 125

மேலே