மகிழ்வோம் நிகழ்வதை எண்ணி !

துள்ளி ஓடும் புள்ளிமான்
அள்ளி வீசிடும் பார்வை
உறங்கிடும் நெஞ்சையும்
உணர்வால் மாற்றிடும் !

வனத்தில் திரிந்திடும்
வண்ண விலங்குகளில்
எண்ணத்தை ஈர்த்திடும்
ஓடிடும் மான் இனம் !

பசுமை வேய்ந்த சூழலில்
தம்மை மறந்த சூழ்நிலை !
பாவமறியா பார்வையுடன்
பகைவரை தேடும் நிலை !

மனித இனத்திற்குள் பகை
காட்டில் விலங்கிற்குள் பகை
பூமியில் நாட்டிற்குள் பகை
உலகில் நாடுகளுக்குள் பகை !

மறைய வேண்டும் பகையுணர்வு
செழிக்க வேண்டும் நட்புணர்வு
மறக்க வேண்டும் முடிந்ததை
மகிழ்வோம் நிகழ்வதை எண்ணி !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Mar-13, 10:52 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 140

மேலே