மர்மம் ஏனோ ?

அரசே உன்னை நீ
அறிமுகப்படுத்து -அதற்காக
முரசில்லாத ஆட்சியை
முடிவில்லாமல் நடத்தாதே !
பாஸ்மார்க்கை போட்டு
பாலகனை தேர்ந்தெடுக்கிறாய்
டாஸ்மார்க்கை விட்டு
பட்ஜெட் போடுகிறாய்
அப்பாக்களை ஆடவிட்டு
தப்பாட்டம் நடத்தும் நீங்கள்
அம்மாக்களின் நிலையையும்
தம் மக்களின் வறுமையையும்
கண்டு காணாது இருப்பதன்
மர்மம் தான் என்ன ?

எழுதியவர் : (12-Mar-13, 2:00 pm)
சேர்த்தது : paptamil
பார்வை : 58

மேலே