தொடர்கிறேன்

சுட்டெரிக்கும் வெயில்
சோலையில் வறட்சியை
எழுதிப்போகும்

அனல் காற்று
மிச்சமிருந்த ஈரத்தையும்
உலர்த்திவிடும்

கானல் நீரைப் பார்த்து
ஞாபகப் பறவைகள்
தாகம் தீர்க்கப் பறக்கும்

உன் உறவின் வழி
ஒற்றையடிப் பாதையாய் தொடர்ந்து
ஆகாயமாய் விரிந்த நிலையில்
பயணம் தொடரும்

சந்திக்காத ஏக்கங்களை
ஆசுவாசப் படுத்த
நீ எங்காவது நின்றிருப்பாய்
நிழல்போல
எனும் நம்பிக்கையுடன் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (20-Mar-13, 11:26 am)
Tanglish : thodarkiren
பார்வை : 118

மேலே