"காதல் + கற்பனை" (6)

ஆதவனின் ஆதிக்கம் ஆழ்கடலினுள் அடங்கியது...
இலைமறை காய் போல் மறைந்திருந்த பால் நிலா,
அதீத பிரேமையுடன் பூமியைக் குழந்தையைப் போல்
குளிரத்தழுவி அணைத்துக் கொண்டிருந்தது.......
இயற்கையின் பரிணாம மாற்றங்கள் எதுவும்
அவளை வசப்படுத்த இயலவில்லை.......
செதுக்கிய சிலை போல் உட்கார்ந்திருந்தாள்...
கரங்களில் அவன் கொடுத்துச் சென்ற
திருமணப் பத்திரிகை படப்படத்துக்கொண்டிருந்தது..
மனதில் சொல்லொணா வலி. வேதனையில்
உள்ளமும் உயிரும் துடிதுடித்துக் கொண்டிருந்தன..
சிந்தனைகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து,
அவளின் சோக காவியத்தில் சொற்ப்போர் நடத்தின...
"சொல்லணும், சொல்லலாம் என்ற தயக்கத்திலேயே.
சொல்லாமல் கைநழுவவிட்ட அவர்களின் காதல்....
இரு சமுத்திரங்களும் கலவாது தம் தம் வரம்புக்குள்ளேயே
தேங்கி நின்றுவிட்டதால், விலகி விட்டன...
விழித்துளிகளில் விரைவாக பயணித்தன அவள் கண்ணீர்.
சமயசந்தர்ப்பம் தெரியாமல் யார் வீட்டு வானொலியோ
தன்பாட்டுக்கு பாடியது இப்படி....
"எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டுவிட்டு சென்றானடி......."
உயிர்மூச்சு ஒருகணம் வெளியாகி மீண்டும் வந்து
சேர்ந்தது போல் கதறி அழுதாள் அவள்.....
மனதை ஒரு நிலைப்படுத்தினாள்...
பத்திரிகையை மார்போடு சேர்த்தணைத்தாள்..
தன் வாழ்க்கைப் பயணத்தை இனிதாக பிரயாணிக்க,
இல்லறப் படகில் இறங்கவிருக்கும் அவன் ,
எங்கிருந்தாலும் நலமுடனும் சுகமுடனும் வாழணும்.
மனதாறப் பிரார்த்தித்தாள். வாழ்த்தினாள்...
அவள் வாழ்க்கை என்ற புத்தகத்தில் ஓர் அத்தியாயம்
ஓசையின்றி, வன்முறையின்றி, இரத்தக்காயத்தை
ஏற்படுத்தி மூடப்பட்டுவிட்டது......
இனிவரும் அத்தியாயங்கள் இனிமையாக இருக்க
இறைவன் மனம் இளகட்டும்.........!!!
...............................++++++++.........................

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (25-Mar-13, 11:43 am)
பார்வை : 86

மேலே