அம்மா, இனி உனை எங்கு காண்பேன்
அம்மா,
எந்தன்
ஈடில்லா பேரிழப்பே...
கடைசியாய்
ஒரு முறை
கண்களில்
ஈரக்கசிவுடன்
கண்விழித்து பார்த்தாயே...!!!
பாவப்பட்ட உன்
சொந்தங்களை பார்க்கவா?
இல்லை,
பாவப்பட்ட இந்த
துனியாவை (உலகை) பார்க்கவா?
உன்
உதட்டு துடிப்பால்
என்ன
சொல்ல வந்தாய்...
தொண்டைக்கும்...நெஞ்சுக்குமாய்...
நீ இழுத்துவிட்ட
உயிர் மூச்சை
ஏப்பம் என்று
ஏமாந்து விட்டோமே...!!!???
நாட்கணக்காய் மருத்துவமனையில்
இருந்தால் மற்றவர்க்கு சிரமம்
என்றெண்ணி...சீக்கிரமாய்
சென்றாயோ...
உன் கையை பிடித்திருந்த
எனக்கு
உன் உயிரை பிடிக்க முடியலையே...
மின்விசிறி காற்று கூட
குளிர் என்பாயே...
இன்று, கடைசியாய்...
உன் முகத்தைக்கான
வரும் மகளுக்காய்...
உறைய வைக்கும்
வெளிச்சப்பேலைக்குள்
உறங்கிக்கிடக்கிறாயே...!!!
வேதனைக்கு
மன்னிக்க வேண்டுகிறேன்...
அணு அணுவாய்
எங்கள் வாழ்வில்
ஊறிப்போய்...
எங்கு பார்த்தாலும்
உன் நினைவே...
உன் பிரிவின் துக்கத்தில்
அடைத்த தொண்டையும்,
அழுத கண்களும்,
வலிக்கிறது...
என் செய்வேன்...???
இல்லையென வருவோர்க்கு
நீ கைபொத்தி கொடுத்த
தருமங்கள் எத்தனை...
சீதேவி...புண்ணியவதி
என்று
நீ வாங்கிய
வாழ்த்துக்கள் எத்தனை....
நீ...விட்டுப்போன
சில்லறை டப்பா
உந்தன்
சிந்தனை சொல்கிறது...
உன் பிள்ளையாய்,
உனை நான்
சந்தோசப்படித்தியிருக்கிறேனா...
தெரியாது...???
ஆனால்
ஒரு நாளும்
உனை நான்
கஷ்டப்படுத்தியதில்லை...
கஷ்டப்பட வைத்ததில்லை...
உனை நான்
பெருமைப்படுத்தினேனா...?
தெரியாது,
நிச்சயம்
உன் பெயர் கெடுத்ததில்லை...
என்றாவது
உன்னை நான்
அன்பாய் கடிந்திருப்பேன்!!!
அதுவும்,
உன் அளவுச்சாப்பாட்டை
அதிகப்படுத்தத்தான்...
எனக்கு
விவரம் தெரிந்து
உனைப்பார்த்த
வெள்ளுடையில்தான்
இன்று
மீளாப்பயணமும்
சென்று இருக்கிறாய்...
அம்மா,
உன் அன்பெங்கே...
பரிவான வார்த்தையெங்கே...
பாசமான புன்னகையெங்கே...
இனி
என்று காண்போம் உனை...
இனி
என்று கேட்போம் உனது
நீண்ட வாழ்த்தை...
இறைவா,
என் தாயாரை
சுவன (சொர்க்கம்) வாசியாக்கிவிடு...
என
உனை நாங்கள்
மன்றாடி கேட்டு
இந்த கவிமலரை
எனது தாயாரின்
பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்...
என் தாயாரின்
நீண்ட வாழ்த்தை..
அனைவருக்கும் உரித்தாக்குகிறேன்...
ஆயுசு விரிய...
ஆல விருட்சமாய்...
சீரும்...சிறப்பும் பெற்று
நோயற்ற வாழ்வும்...
குறைவற்ற செல்வத்தோடும்
வாழுங்கள்...