மது என்னும் பொது எதிரி

படுகுழிக்கான பாதை
அதன் மற்றொரு பெயர்தான் போதை!

இங்கு பள்ளிகள் திறக்கப் பல தடைகள்!
ஆனால் வீதிக்கு வீதி மதுக்கடைகள்!

நம் அறிவை மயக்கிடும் அமிலம்!
அதை அரசே விற்கும் அவலம்!

நம் நற்குணத்தில் நெருப்புதனை மூட்டும் - அந்த
நஞ்சின் மேல் ஏனிந்த நாட்டம்?
மாண்டவர் பலர் கதை கேட்டும் - இன்னும்
மதுக்கடையெங்கும் பெருங்கூட்டம்!

நம் சிந்தனைத் திறனை சிதைக்கும் - பின்
விகார எண்ணங்கள் விதைக்கும்!
நமை நரகத்தின் பாதையில் நடத்தும்! - பின்
சாக்கடையோரம் கிடத்தும்!

கல்லீரல் கழிவுகள் சுமக்கும்!
நரம்புகள் தன் பலம் இழக்கும்!
வலுவின்றி கால்கள் நடுங்கும்!
வறண்ட சாலையிலும் வழுக்கும்!

மதுவை மறத்தல் எளிது!
மதுவின்றி வாழ்தல் இனிது!
மனைவியின் கண்ணீர் முன்னே
மயக்கும் மதுவா பெரிது?

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (12-Apr-13, 11:12 am)
பார்வை : 156

மேலே