விஜய வருடம் வருக, வருகவே!

விஜய வருடம் வருக, வருகவே!


வருடத்தில் வந்து நிற்கும் வெற்றியே!

வருக, வருகவே!

எம் வாசலில் கோலமிட்டு

உம்மை வரவேற்றோம் !

எங்கள் இல்லம் வருகவே!

உள்ளம் உருக உண்மைக் கம்பளம் விரித்து

உம்மை வரவேற்றோம்!

எம் இல்லம் வந்தமர்க!

எல்லையில்லா அன்பினில்

யாம் பரந்து விரிந்தோம்!

விரிதலே வெற்றி என புரிதல் தந்து

எம் யாவர் செயலிலும்

செம்மையும் நன்மையும் நிறைக்க

வருக, வருகவே!

வெற்றியாம் வருடமே,

வருக, வருகவே!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (12-Apr-13, 7:12 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 119

மேலே