எந்தநாளும் நட்பு தினம் தானே ...!
![](https://eluthu.com/images/loading.gif)
நானும் நீயும் பேசிய நாள்தான் ...
நம் நட்பு தினமாக கொண்டாடுவோம் ...
இதை யாருக்கும் சொல்லிவிடாதே ..
நம் நட்பையும் வியாபாரமாக்கிவிடுவார்கள் ...
நம் படத்தை போட்டு அட்டையடிப்பார்கள் ...
படத்தை போட்டு சுவரொட்டி அட்டையடிப்பார்கள் ..
எந்த தினமும் என்று வியாபாரமாகி விட்டதால் ..
நாம் ரகசியமாக கொண்டாடுவோம் ...
நண்பா கோபத்தில் ஏதேதோ சொல்லிவிட்டேன் ..
நமக்கு எந்தநாளும் நட்பு தினம் தானே ...!