உன் பிரிவில் தவிக்கும் என் இதயம்.
என்னவனே ...
உன் தோள் சாய்ந்து
என் துக்கம் மறக்க ஆசை ...
உன் விரல் பட்ட மல்லிகை பூவும் ...
நீ சூடி விட்ட ரோஜா
இதழ்களும் வாடி விட்டது
உன் பிரிவால்....
பூக்கள் பட்டு போனாலும்
நம் காதல் நினைவுகள்
இன்றும் பசுமையாக
தான் செழித்து கொண்டு இருக்கிறது...
என் கண்ணீரால்...
தினம் தினம் ஏமாற்று
போகிறது என் விழிகள்.....
என்னவனோ என எண்ணி
வேறு ஒருவன் முகம் காணும் போது...
வரிகள் அல்ல காதலனே
இவை என் இதயத்தின் வலிகள்....
வண்ணத்துபூச்சி போல
சிறகடித்து பறந்து கொண்டிருதேன்
உன் வருகைக்கு முன் ....
இன்றோ....
விளையாட்டு பிள்ளையின்
கையில் சிக்கி தவிக்கும்
சிறகுகள் இல்லா வண்ணத்து பூச்சி போல ....
உன் காதல் பிரிவால்...
வலிகளுக்குள் சிக்கி தவிக்கிறது
என் இதயம்...