உணவை வீணாக்காதீர்

ஊனும் உயிரும்
உலகில் உய்த்திட
உழைக்கும் எவரும்
உண்டு வாழ்ந்திட
ஊன்றி வித்திட்டு
உழுது பயிரிட்டு
உரமிட்டு வளர்த்த
உயிரான கதிர்களை
உச்சி வெயிலிலே
உற்சாக குரலுடன்
உரிமையுடன் அறுத்து
உறைவிடம் சேர்த்து
உயர்ரக அரிசியாக்கி
ஊருக்கும் விற்றிட்டு
உணவாக்க தமக்கும்
உணவக தேவைக்கும்
உள்ளதை சேமித்தும்
உளமார சமைத்து
உறவோடு அமர்ந்து
உண்டு மகிழ்ந்திட்டு
உண்ண மிச்சத்தை
உறையில் வைக்காமல்
ஊசியும் போகாமல்
உண்ணும் அளவினை
ஊர்ந்து கணக்கெடுத்து
உருப்படிகளை அளந்திட்டு
உள்ளவர்க்கு தேவைபோக
உண்டதின் மிச்சத்தை
ஊரரறிய வீணாக்குவது
உண்பவனின் உரிமையை
பறிப்பதற்கு சமம் சமம் !

சிந்தியுங்கள் உள்ளங்களே
உணவை வீணாக்காதீர்
உரிமையை பறிக்காதீர்
உழைப்பை மதியுங்கள்
உற்சாகமாய் வாழுங்கள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Apr-13, 9:55 pm)
பார்வை : 2748

மேலே